Home சினிமா பொங்கல் கொண்டாடி ஜனவரி 30-ல் படம் ரிலீஸாகும் தகவலை பகிர்ந்த கெத்து தினேஷ் நடிக்கும் ‘கருப்பு...

பொங்கல் கொண்டாடி ஜனவரி 30-ல் படம் ரிலீஸாகும் தகவலை பகிர்ந்த கெத்து தினேஷ் நடிக்கும் ‘கருப்பு பல்சர்’ படக்குழு!

கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், கமர்ஷியல் கொண்டாட்மாக உருவாகியுள்ள ‘கருப்பு பல்சர்’ திரைப்படம் ஜனவரி 30-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

அந்த விவரத்தை ஊடகத்தினருக்கு அறிவித்து, உற்சாகத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடினர். படத்தின் களமும் பொங்கலையும் ஜல்லிக்கட்டு மதுரையும் மையமாக கொண்டிருப்பதால் இந்த கொண்டாட்டம் படக்குழுவை பெரிதும் உற்சாகப்படுத்தியது.

பிரபல இயக்குநர் எம் ராஜேஷ் அவர்களிடம் உதவி இயக்குநராகவும், அவரது படங்களில் திரைக்கதையிலும் பணியாற்றிய முரளி கிரிஷ் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

மதுரை பின்னணியில் கருப்பு காளையுடன் வாழும் ஒரு இளைஞன், சென்னையில் பல்சருடன் வாழும் இளைஞன், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், அதை எப்படி தாண்டி வருகிறார்கள் என்பது தான் கதை. அசத்தலான காமெடியுடன், பரபர திருப்பங்களுடன், அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

லப்பர் பந்து படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு மதுரை கிராமத்து இளைஞனாகவும், சென்னை மாடர்ன் இளைஞனாகவும் இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் அசத்தியுள்ளார் கெத்து தினேஷ்.

இப்படத்தில் தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ரேஷ்மா வெங்கட், மதுனிகா நடித்துள்ளனர். வில்லனாக பிரின்ஸ் அஜய் நடித்துள்ளார்
இவர்களுடன் மன்சூர் அலிகான், சரவணன் சுப்பையா, கலையரசன் கன்னுசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இன்பா பாடல் எழுதி இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சசி தாட்ச எடிட்டிங் செய்ய, டி.உதயகுமார் சவுண்ட் டிசைன் செய்துள்ளார். கே வி தமிழரசு, முருகானந்தம் நிர்வாக தயாரிப்பு பணிகளை செய்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்