Home சினிமா எந்தவொரு சாதியையோ, மதத்தையோ, சமூகத்தையோ பிரதிபலிப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ இந்தக் கதை உருவாக்கப்படவில்லை! -‘கூஸ்கோர் பண்டட்’ திரைப்படம்...

எந்தவொரு சாதியையோ, மதத்தையோ, சமூகத்தையோ பிரதிபலிப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ இந்தக் கதை உருவாக்கப்படவில்லை! -‘கூஸ்கோர் பண்டட்’ திரைப்படம் குறித்து விளக்குகிறார் இயக்குநர் நீரஜ் பாண்டே

எங்கள் திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனை அடிப்படையில் காவல் துறையை மையப்படுத்திய கதை. இதில் பயன்படுத்தப்படும் ’பண்டட்’ என்ற சொல் ஒரு கற்பனை கதாபாத்திரத்திற்கு வழக்கத்தில் உள்ள பெயர் மட்டுமே. இந்தக் கதை முழுவதுமே தனிப்பட்ட ஒருவரின் செயல்கள் மற்றும் அவர் எடுக்கும் தேர்வுகளை மையமாகக் கொண்டது. எந்தவொரு சாதியையோ, மதத்தையோ அல்லது சமூகத்தையோ பிரதிபலிப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ இந்தக் கதை உருவாக்கப்படவில்லை.

ஒரு கதை சொல்லியாக மிகுந்த பொறுப்புணர்வோடு என்னுடைய கதைகளை அணுகுகிறேன். என் படங்களின் மூலம் நான் சொல்லும் கதைகள் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் விதமாகவும் அவர்களை மரியாதையோடு நடத்தும் விதமாகவும் இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இதற்கு முன்பு நான் இயக்கிய மற்ற படங்களைப் போலவே, இந்தத் திரைப்படமும் பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் தலைப்பு சிலரை காயப்படுத்தியிருக்கிறது என்பதை புரிந்து கொண்டு உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். இந்த திரைப்படத்தை முழுமையாக பார்க்கும்போது கதையின் சூழலை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஆனால், படத்தின் கிளிம்ப்ஸ் வைத்து மட்டுமே கதை தற்போது விவாதப்பொருளாகி இருக்கிறது. இதன் பொருட்டும், பார்வையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இதுவரை படத்திற்கென செய்த புரோமோஷனல் மெட்டீரியல்ஸ் அனைத்தையும் நீக்க முடிவு செய்திருக்கிறோம். இந்தத் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தை முழுமையாக பார்த்து பார்வையாளர்கள் நிச்சயம் கதையை புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்