Home சினிமா மாஸ்டர் மகேந்திரனின் அதிரடி ஆக்சன் திரைப்படம் ‘நீலகண்டா’ சன் நெக்ஸ்டில் வெளியானது! 

மாஸ்டர் மகேந்திரனின் அதிரடி ஆக்சன் திரைப்படம் ‘நீலகண்டா’ சன் நெக்ஸ்டில் வெளியானது! 

மாஸ்டர் மகேந்திரன், கதைக்கு முக்கியத்துவமுள்ள படங்களைத் தேர்வு செய்து தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய அளவில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்துள்ள ‘நீலகண்டா’ திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியாகியிருக்கிறது.

யாஷ்னா முத்துலுரி, நேஹா பதன், ஸ்னேஹுலால், ராம்கி, பப்ளு ப்ரித்விராஜ், சுபலேகா சுதாகர், பரத் ரெட்டி, சத்ய பிரகாஷ், சித்ரம் சீனு மற்றும் சிவகார்த்திக் தன்டா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் கர்மா மீது அதீத நம்பிக்கை கொண்ட சாதாரண தையல்காரனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனை மற்றும் அவனது வாழ்க்கையை புரட்டி போடும் எதிரியை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை மையமாக கொண்ட அதிரடி ஆக்ஷன் ஜானரில் சொல்லும் கதையம்சம் கொண்டிருக்கிறது.

படத்தை ஸ்ரீனிவாசுலு மற்றும் வேணு கோபால் சார்பில் எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க ராகேஷ் மாதவன் எழுதி இயக்கியுள்ளார். அனில் இனமடுகு நிர்வாக தயாரிப்பும், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை ஸ்ரவன் ஜி குமார் மேற்கொண்டுள்ளார். மார்க் பிரசாந்த் இசையமைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்