Home சினிமா இன்றுவரை கண்டதில்லை நான்… டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் காட்டு செண்பகம் முதல் பாடல்...

இன்றுவரை கண்டதில்லை நான்… டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் காட்டு செண்பகம் முதல் பாடல் வெளியானது!

ஜேக்ஸ் பிஜாய் டொவினோ தாமஸ் காம்போ மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனியின் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பு பாடலான ‘காட்டு செண்பகம்’ வெளியிடப்பட்டிருக்கிறது.

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடலான ‘காட்டு செண்பகம்’ எனும் பாடலின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து ஏற்கனவே இசை ஆர்வலர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.

இப்பாடலின் தமிழ் பதிப்பின் வரிகளை மோகன் ராஜா எழுதியுள்ளார். இது பாடலுக்கு ஒரு புதிய பாடல் வரிகளையும், அழகியலையும் வழங்குகிறது. இந்த பாடலை அகில் ஜே சந்த் மற்றும் ஆவணி மல்ஹார் பாடியுள்ளனர். இவர்களின் ஆத்மார்த்தமான குரல்கள்.. இசையமைப்பின் உணர்ச்சி ஆழத்தையும், வசீகரத்தையும் ஒன்றிணைக்கின்றன.

இந்த படத்தில் தென்னிந்திய திரைப்படத் துறையை சார்ந்த பல முக்கிய நடிகர்களும் இடம் பெற்றுள்ளனர். மலையாள பதிப்பிற்கு கிடைத்த வலுவான வரவேற்பை தொடர்ந்து தமிழ் பதிப்பும் பார்வையாளர்களிடையே பரவலாக எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்வையை ஈர்க்கும் பாடல் வரிசையில் டொவினோ தாமசுடன் முன்னணி நாயகியான கயாடு லோஹரும் இடம் பிடித்துள்ளார். இது பாடலின் காதல் மற்றும் உணர்வுபூர்வமான ஈர்ப்பினை அதிகரிக்கிறது.

தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக ஜேக்ஸ் பிஜாய் தற்போது திகழ்கிறார்.

சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர் ரசிகர்களுடனான உரையாடலின் போது, ஜேக்ஸ் பிஜாயின் ‘லோகா’ படத்திற்கான இசையை பாராட்டினார். பள்ளிச்சட்டம்பி படத்தின் மூலம் டொவினோ தாமசுடன் தனது வெற்றிகரமான பங்களிப்பை தொடர்கிறார். இந்தப் படம் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் ஜேக்ஸ் பிஜாய் ஆகியோர் இணைந்து பணியாற்றும் நான்காவது படமாகும். அவர்கள் இதற்கு முன் ‘குயின்’, ‘ஜன கன மன’ போன்ற படங்களின் சார்ட் பஸ்டர் ஆல்பங்களை வழங்கிய கூட்டணியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்