Home சினிமா காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன்; அவனுக்கு கடவுள் தந்த வினோத...

காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன்; அவனுக்கு கடவுள் தந்த வினோத தண்டனை… குட்டி ஸ்டோரி யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள ‘ஃபேக் ஐடி’ குறும்படம் வழங்கும் பரபரப்பு அனுபவம்!

தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள் அவனுக்கு வினோதமாக கொடுத்த தண்டனை, அதனால் அவன் படும் அவஸ்தை என காமெடி கலந்த ஃபேன்டஸி பாணியில் உருவாகியுள்ள குறும்படம் ‘ஃபேக் ஐடி.’

இந்த படம் குட்டி ஸ்டோரி யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. படத்தில் புதுமுக நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு பலமாக அமைந்துள்ளது.

படத்தை அவசரமாக ஓட விடாமல் எல்லா உணர்வுகளும் ஆடியன்ஸ்க்கு சென்றடைய நேரம் கொடுத்து படத் தொகுப்பு செய்துள்ள எடிட்டர் எம் கே விக்கி யை பாராட்டலாம்.

கேமராமேன் ஜாஃபிரி நடிகர்களையும் லொகேஷன் காட்டிய விதம் குறும்படத்தை அடுத்த கட்டத்திற்கு கூட்டி செல்கின்றது.

கோபம், காமெடி, கடவுள், நட்பு என்று பல தளத்தில் பயணம் செய்யும் குறும்படத்தின் எல்லா உணர்வுகளையும் ஆடியன்ஸ்க்கு இசை மூலம் சிறப்பாக கொண்டு சேர்த்திருக்கிறார் கோகுல்ராஜ்.

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கம் இருந்து பார்த்திருக்கும் இந்த படம் பெண்களின் உணர்வுகளை மதிக்கும் படமாக உருவாக்கியுள்ளனர்.

கடவுள் இல்லை என்று சொல்பவர்களைக்கூட இந்த படத்தில் வரும் கடவுளை பார்த்தால் ரசிக்கும்படி உருவாக்கிய இயக்குநர் பாலு சைலாஸை பாராட்டலாம்.

மொத்ததில் இந்த குறும்படம் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உழைப்பால் பார்க்கும் ஆடியன்ஸ்க்கு நல்ல அனுபவத்தை கொடுக்கிறது. கடைசி பத்து நிமிடம் சிறப்பு.  கண்டிப்பாக இந்த மகளிர் தினத்தில் பெண்களின் உணர்வுகளை மதிக்கும் அழகிய குறும்படத்தை நிச்சயம் பார்க்கலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்