Home சினிமா ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தில் ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!

‘டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தில் ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!

அஜய் ஆர் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமாண்டி காலனி’ திரைப்படம் தமிழில் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மூன்றாவது பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியிருப்பது ‘தி லைப்ரரியன்’ என்ற மர்மமான கதாபாத்திரம். புத்தாண்டு தினத்தில் சஸ்பென்சாக வைக்கப்பட்ட, இரண்டாம் பாகத்தின் மர்மமான ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் இப்போது யார் நடிக்கிறார் என்பது படக்குழு வெளிப்படுத்தியுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நடிப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள கிளிம்ப்ஸ் மற்றும் பிடிஎஸ் காட்சிகள் வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்