பிரஜின் கதாநாயகனாக நடிக்கும் ‘கொடூரா’ படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், திரையுலகினர் கலந்து கொண்டனர்.
அதையடுத்து 40 நாட்களில் முடிக்க திட்டமிட்டு ஏற்காடு, பாண்டிச்சேரி, உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் சார்லஸ் ஆனந்த். இந்த படம் மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும், நேசிக்க வேண்டுமே தவிர எவரையும் மனிதத் தன்மையற்றவர்களாக பார்க்கக் கூடாது எனும் மையக்கருத்தைக் கொண்டு உருவாகிறது.
நிஷா கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக இலியாஸ் நடிக்கிறார். சம்பத்ராம், வாழை ஜானகி அம்மாள், அருவி மதன், டி.எம் கார்த்திக், ஷகிலா, பேபி யாஷாஸ்வினி ஆகியோரும் நடிக்கின்றனர்.
படத்தில் மூன்று பாடல்கள், இரண்டு சண்டைக்காட்சிகள் இடம்பெறுகின்றன.
படக்குழு:-
தயாரிப்பு – யாஸ் எண்டர்டைன்மென்ட்
வசனம்- நீலு ஐயப்பன்
ஒளிப்பதிவு – வெற்றிவேல் முருகன்
இசை – சௌகத் அலி, பீட்டர் நவீன் தங்கராஜ்
பாடல்கள் -யுகபாரதி
ஸ்டண்ட்- ஸ்பீடு மோகன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – தஷிகிரண்
தயாரிப்பு நிர்வாகம் – வம்சி கிருஷ்ணா
மக்கள் தொடர்பு- வெங்கட்



