காதல், நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள கவின், தற்போது முழுக்க குடும்பத்தை மையமாகக் கொண்ட கதையில் நடிக்க உள்ளார்.
இந்த திரைப்படம் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சமகால வாழ்க்கை முறையையும், உறவுகளின் நுணுக்கங்களையும் பேசும் இப்படம், எல்லா தரப்பினரையும் கவரும் வகையில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகவுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இத்திரைப்படத்தை, தேசிய விருது பெற்ற பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் முதன்மை அசோசியேட்டாக பணியாற்றிய பிரவீன் பரமசிவன் இயக்குகிறார்.
இந்த படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

