Home பொது போஸ்டரை பார்த்து நான் பி.டி. மாஸ்டராக நடிக்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்! -‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ பட...

போஸ்டரை பார்த்து நான் பி.டி. மாஸ்டராக நடிக்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்! -‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ பட விழாவில் நாயகி ரச்சிதா மகாலக்ஷ்மி

யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த் நடிப்பில், கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்கும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது.

நிகழ்வில் நடிகை ரச்சிதா பேசியதாவது: பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம். இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி. ஏற்கனவே பலரும் கூறியதுபோல், ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது மிகவும் கடினமான பயணம். ஒரு கதையை உருவாக்கும் கட்டத்திலிருந்தே பல சவால்கள் தொடங்கிவிடுகின்றன. இயக்குநர் செந்தில்நாதன் சாருடன் கதையைப் பற்றி பேசும்போதெல்லாம், இரண்டு வாரங்களுக்கு முன் பேசிய விஷயங்கள் மீண்டும் மாறியிருக்கும். கதை இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல மாற்றங்கள், விவாதங்கள் நடைபெறும்.

இந்தப் படம் செந்தில்நாதன் சாரின் கனவுப் படைப்பு என்று சொல்லலாம். ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு கனவுத் திரைப்படம் இருக்கும்; அதுபோல இந்தப் படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. அந்தக் கனவு முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறது. திரைப்படம் உருவாகும் பயணத்தில் பல சிரமங்களும், எதிர்பாராத சவால்களும் வந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து இன்று இந்தப் படத்தின் பூஜை விழா நடைபெறுகிறது. இனி இந்தப் படம் எந்தத் தடையும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும் என்பதே என்னுடைய மனமார்ந்த விருப்பம்.

போஸ்டரைப் பார்த்தவுடன் நான் ‘பி.டி. மாஸ்டர்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதை படத்தில் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். அனைவருக்கும் நன்றி.”

இயக்குனர் கே.ஆர் செந்தில்நாதன் பேசியதாவது: அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது வணக்கம். இன்று முதல் நாளாகவே எங்கள் படத்தின் பூஜை விழாவுடன் படப்பிடிப்பைத் தொடங்கியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் படத்தை தயாரிப்பாளர் திரு. மஞ்சுநாத் தயாரிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக ரச்சிதா மேடம், யாஷிகா மேடம் மற்றும் இங்கு வருகை தந்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி. அனைவரின் ஆதரவுடன் இந்தப் படம் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.

நடிகை யாஷிகாஆனந்த் பேசியதாவது: அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குநர் செந்தில்நாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை அளித்ததற்காக தயாரிப்பாளருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘டி.டி. நெக்ஸ்ட் லெவல்’ படத்திற்குப் பிறகு, ஒரு நல்ல கதைக்காக காத்திருந்தேன். அப்போது இந்தக் கதை என்னிடம் வந்தது. இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எங்களை வாழ்த்த வந்துள்ள சக நடிகர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இந்தப் படத்தை விரைவில் திரையரங்குகளில் உங்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். விரைவில் திரையரங்குகளில் அனைவரையும் சந்திப்போம். நன்றி.

நடிகர் மெல்வின், நடிகர் அமித் பார்கவ், இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, நடிகை அஸ்மிதா உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி. உதயகுமார், நடிகையும் அரசியல்வாதியுமான ஒய் ஜி மதுவந்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்