Home சினிமா கட்டா குஸ்தி 2 சினிமா விமர்சனம்

கட்டா குஸ்தி 2 சினிமா விமர்சனம்

பல படங்களோட பார்ட் டூ ‘ஐயோ சாமி ஆளவிடு’ங்கிற ரேஞ்சுக்கு ரசிகர்களைக் கதறவுட்ட, கதற வுடுற ஹிஸ்ட்ரிய கொண்ட தமிழ் சினிமாவுல ‘ஸ்க்ரிப்ட்’க்கு உட்காருறப்போ ‘ஆடியன்ஸை ஹேப்பியாக்கணும்’கிற எண்ணத்தை மனசுல வெச்சுக்கிட்டா கண்டிப்பா வெல்ல முடியும்னு நிரூபிச்சிருக்காரு டைரக்டர் செல்லா அய்யாவு.

போன பார்ட்ல நம்ம ஹீரோ வீரா, பொண்டாட்டி கீர்த்திக்கு குஸ்தி தெரியும்னு தெரிஞ்சு ஷாக் ஆகி, அப்பறம் ‘சரி விடு’ங்கிற முடிவுக்கு வந்து, மூடாகி சூடாகி பேபி ஃபார்ம் ஆகுற வரை ஒரே ஜாலிதான்…

இந்த பார்ட்ல வீரா அடுத்த பேபிக்கு அஸ்திவாரம் போடலாம்னு பார்க்குறாரு. கீர்த்தி குஸ்தில நேஷனல் லெவல்ல சாம்பியனாகுற லட்சியத்தை வெச்சுக்கிட்டு அதுக்காக தயாராகுறதால வீராவோட ஆசைய அடக்கி வைக்கிறாங்க. அந்த கடுப்புல இருக்கிற வீரா, அவருக்கே தெரியாம கீர்த்திக்கு வில்லனா மாறுறாரு.

அது எப்படி, என்னா மேட்டரு, கீர்த்தியால குஸ்தில சாதிக்க முடிஞ்சுதா இல்ல வீராவோட ஆசைப்படி குவா குவாவுல முடிஞ்சுதாங்கிறதுதான் ஸ்க்ரீன்பிளே…

வீராவா, உடம்பு முழுக்க சுறுசுறுப்பையும் மனசு முழுக்க உற்சாகத்தையும் நிரப்பிக்கிட்ட மனுஷனா விஷ்ணு விஷால். பொண்டாட்டிய வேலைக்கும், குஸ்தி போட்டிகளுக்கும் அனுப்பிட்டு சமைக்கிறதுல ஆரம்பிச்சு குழந்தையை கவனிச்சுக்கிறது வரை எல்லாத்தையும் இழுத்துப் போட்டு செய்யுற ஹவுஸ் ஹஸ்பண்ட்டா வர்றாரு. கணவனா, ஒரு குழந்தைக்கு தகப்பனா பாசநேசம் காட்டுறதுல பெர்ஃபாமென்ஸ் அசத்துது. மகளோட மிஸஸ் கூட பிரெண்ட்ஷிப் உருவாகி அடிக்கிற லூட்டிகளும், பொண்டாட்டி கூட குஸ்தில மோதுற சீனும் கிளுகிளுப்புக்கு கேரண்டி.

கணவனோட ஆசைக்கு தடா போட்டுட்டு, லட்சிய வெறில வேகமெடுக்கிற வீராங்கனை கீர்த்தியா ஐஸ்வர்ய லெஷ்மி. ஒரு பக்கம் பார்த்தா குத்துச் சண்டைல வெளுத்துக் கட்டுற சாம்பியன், இன்னொரு பக்கம் பார்த்தா கண்டிப்பான அம்மா, இன்னொரு பக்கம் ஆஸ்யூஸ்வல் பொஸஸிவ் பொண்டாட்டின்னு அம்மணி பூகுந்து வெளையாடியிருக்காங்க. கணிசமா கவர்ச்சி விருந்தும் வெச்சிருக்காங்க.

ஆத்தாடி ஆத்தா, டாடி செல்லமா வர்ற ஷாரா ஆளப் பாத்தா நாலு சாண் உயரம்தான். அந்த குட்டிச் சுட்டிக்கு படபடன்னு பேசிக்கிட்டு தடதடன்னு ஓடிக்கிட்டே இருக்கிற அம்மாவ அவ்வளவா பிடிக்காது. அப்பனுக்கு சப்போர்ட்டா இருந்துக்கிட்டு அம்மாவ பத்தி ரிப்போர்ட் பண்றதாவுட்டும், கோர்ட்ல ஜட்ஜ பாத்து என்னய கேக்காம எப்படி முடிவெடுப்பீங்கன்னு ரவுசு காட்டுறதாவுட்டும் சான்ஸே இல்ல… ஆக்டிங்கும் டயலாக் டெலிவரியும் நிச்சயமா வேற லெவல்தான்.

டீச்சரா வர்ற மோக்ஷா செங்குப்தாவுக்கு வெச்சிருக்கிற காட்சியெல்லாம் அதிரிபுதிரி அதகளம். புஸுபுஸுன்னு இருக்கிற அந்த மலையாள மல்கோவாவோட கண்ணுல காந்தம் இருக்குது; சிமிட்டுற போதெல்லாம் சுண்டி இழுக்குது. ‘அப்படி போடு போடு’ பாட்டுக்கு போட்டிருக்கிற ஆட்டம் ஆண்களோட ஹார்மோன்ஸ்ஸ உசுப்பேத்தாம வுடாது, ஜாக்கிரதை.

பாகுபலில தப்புத்தப்பா முடிவெடுத்து தாறுமாறா தீர்ப்பு சொல்லி கெத்து காட்டுன ராஜமாதா ரம்யாகிருஷ்ணன் ஜட்ஜா வர்றாங்க. அவங்க டிவோர்ஸ் கேஸ விசாரிக்கிற விதமும் இதுவே என் கட்டளை, கட்டளையே சாசனம்னு அடிச்சு வுடுறதும் தியேட்டர கலகலக்க வைக்குது.

கருணாஸும் லிஸி வெங்கட்டும் தனி ரூட்டுல பண்ற கமெடி களேபரமெல்லாம் குஷி மூடுக்கு கொண்டு போய்டும்.

கருணாகரன், காளி வெங்கட், முனிஸ்காந்த், கஜராஜ், ஸ்ரீஜாரவின்னு படம் முழுக்க நட்சத்திரப் பட்டாளம் எக்கச்சக்கம். எல்லாருமே பட்டைய கிளப்புறாங்க.

மியூஸிக் ஷான் ரோல்டன். ஏற்கனவே ரீல்ஸுல வைரலான ‘சம்பவக் காரி’ சாங்கு வைப் மெட்டீரியல். ‘மகராசி’ பாட்டும் மனச மயக்குது. ஆர் ஆர்லயும் நல்ல ஸ்கோர் பண்ணிருக்காரு. கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவுல கேமரா திரும்புற பக்கம்பூரா கலர்புல்லா இருக்குது.

ஒட்டுமொத்தமா பாத்தா அப்பா பொண்ணு சென்டிமெண்ட் கொஞ்சம் ஓவரா தெரியுது. ஹீரோயினோட குறிக்கோளை கடைசி வரை கண்டுக்காம விட்டது கண்டிக்கத் தக்கதுதான். மத்தபடி, குறையா சொல்றதுக்கு பெருசா எதுவும் இருக்குற மாதிரி தெரியல. லாஜிக் பார்க்குற மூளைக்கு ஒரு லாக்க போட்டுட்டு, குழந்த குட்டிகள கூட்டிக்கிட்டு போனீங்கன்னா ரெண்டர மணி நேரம் சிரிச்சு ரசிச்சு என்ஜாய் பண்ணலாம்.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்