ஓரு இளைஞன் தன்னுடன் தங்கியிருந்த இரண்டு பேரை கொடூரமாக கொன்று எரித்துவிட்டு, தானும் எரிந்து சாகிறான்.
அந்த வீட்டில் இந்த கதையின் நாயகன் தங்குகிற சூழ்நிலை.
அந்த வீட்டுக்கு போனதிலிருந்தே அவனைச் சுற்றி மர்மமான விஷயங்கள் நடக்க, அந்த வீட்டில் என்ன நடந்தது, மூன்று பேர் உயிரிழந்ததன் பின்னணி என்ன என்பதை தெளிவுபடுத்தும் விதமாக நகர்த்தி படத்தை முடித்து வைக்கிறார் இயக்குநர் கல்யாண் கே ஜெகன்.

