Home பொது தந்தை – மகள் பாசப் பிணைப்பை அழகாகப் படம் பிடித்துக் காட்டி படத்தின் மீது எதிர்பார்ப்பை...

தந்தை – மகள் பாசப் பிணைப்பை அழகாகப் படம் பிடித்துக் காட்டி படத்தின் மீது எதிர்பார்ப்பை உயர்த்திய  விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் செகண்ட் லுக்!

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், அவர் நடித்துள்ள  ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி மற்றும் ஒரு சிறுமிக்கு இடையிலான நெகிழ்ச்சியான தந்தை – மகள் பாசப் பிணைப்பை அழகாகப் படம் பிடித்துக் காட்டி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.
மு. மாறன் இயக்கியுள்ள இந்த படம், குடும்ப மதிப்புகள் மற்றும் விறுவிறுப்பான அதிரடி காட்சிகள் நிறைந்த ஒரு ஆக்ஷன் ஃபேமிலி டிராமாவாக உருவாகியுள்ளது.
படத்தில் பிரீத்தி அஸ்ரானி, பேபி லிதன்யா, பகவதி பெருமாள் (பக்ஸ்), ஹரிப்பிரியா இசை, அருவி மதன்குமார், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் திவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ், லிசி அந்தோணி, குமார் நடராஜன், விஜயன், பிரவீனா, ஹரிதா மற்றும் ஹரிப்பிரியா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வணிகரீதியான பொழுதுபோக்குத் திரைப்படமாக அமைந்திருந்தாலும், இதன் முதன்மைப் பொருள் ஒரு தந்தை மற்றும் மகளுக்கு இடையே உள்ள நிபந்தனையற்ற அன்பு, தியாகம் மற்றும் பிணைப்பை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செகண்ட் லுக் அனைத்துத் தரப்பு குடும்ப ரசிகர்களின் மனதையும் தொடக்கூடிய ஒரு கதையம்சத்தை உணர்த்துகிறது. உணர்வுப்பூர்வமான தருணங்கள், அதிரடிக் காட்சிகள் மற்றும் ஆழமான கதைகூறல் என ஒட்டுமொத்த குடும்பத்தினருக்குமான ஒரு சிறந்த திரையரங்க அனுபவத்தை அப்பாகுட்டி திரைப்படம் வழங்கும் எனப் படக்குழுவினர் நம்புகின்றனர்.
விஜய் ஆண்டனி, தனது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு மற்றும் அதிரடித் திரையாளுமை மூலமாக மீண்டும் ஒரு மறக்க முடியாத கதாபாத்திரத்தை வழங்கவுள்ளார்.
இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள அப்பாகுட்டி திரைப்படம், வணிக அம்சங்களுக்கும் உணர்வுப்பூர்வமான கதைசொல்லலுக்கும் இடையிலான சரியான சமநிலையை எட்டியுள்ளது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்