Home பொது மனைவியான காதலி ஆவியாகி மிரட்டும் கதைக்களத்தில் உருவாகி வரும் கருப்பட்டி! 

மனைவியான காதலி ஆவியாகி மிரட்டும் கதைக்களத்தில் உருவாகி வரும் கருப்பட்டி! 

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன் கருப்பட்டி’யாக நடித்துள்ளார் பொழிச்சை சி. ராஜ்குமார்.
கொளத்தூர் என்ற கிராமத்தில் கருப்பட்டி என்ற பார்த்திபன் தாயுடன் வசித்து வருகிறான். அதே கிராமத்தில் தந்தையுடன் வசித்து வரும் பவானியை காதலிக்கும் கருப்பட்டி அவளையே திருமணம் செய்து கொள்கிறான்.
திருமணம் முடித்த சில நாட்களில் பவானி மர்மமான முறையில் இறக்கிறாள். அதன் பிறகு பவானி ஆவியாக மாறி அனைவரையும் மிரட்டுகிறாள். இதை அறிந்து கொண்ட கருப்பட்டி அவளை கொலை செய்தது யார்? எப்படி அவள் இறந்தாள் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான்.  அப்போது அவன் பல திடுக்கிடும் சம்பவங்களை சந்திக்கிறான். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மர்மமாகவும் திகிலாகவும் அனைவரையும் மிரட்டுவதாகவும் இருக்கிறது. இப்படி ஒரு கதைக்களத்தில் ஆக்சன் திரில்லராக உருவாகி வருகிறது.
பிரதான கதாபாத்திரத்தில் விஜயராஜ் நடிக்க சமந்து, ஹரிணி தா, கராத்தே ராஜா, ரஞ்சன், ஜிப்சி ராஜ்குமார், கிளி ராமச்சந்திரன், சித்திரகுப்தன், ரமேஷ், கலைவாணி, ரஷீத் சத்யராஜ், செண்பகவள்ளி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
காதல்பதிவு, நந்திவரம், சினிமா கனவுகள், கொலை தூரம் படங்களை இயக்கிய பிரபு ராமானுஜம் கருப்பட்டி படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தனது ஐந்தாவது படமாக இயக்கி வருகிறார்.
சேலம் மேட்டூர் மற்றும் செஞ்சி அதனை சுற்றியுள்ள இடங்களில் செந்தில் மாறன்- கவிநாதன் இருவரும் இணைந்து ஒளிப்பதிவை கவனித்துள்ளனர். இசையமைத்து எடிட்டிங்கையும் டி. எஸ். திவாகர் கவனிக்க ஹிஜாஸ் அகமது பாடல்களை எழுதியுள்ளார். ராம் முருகேஷ் நடனப் பயிற்சியையும், ரமேஷ் சண்டை பயிற்சியையும், என் விஜயமுரளி மக்கள் தொடர்பு பணியையும் கவனித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்