Home பொது தமிழ்நாடு யுனிவர்சிட்டி குருசோம சுந்தரம் – மலையாள யூனிவர்சிட்டி அனுமோல்! -பாரிஸ் கஃபே படம் விழாவில்...

தமிழ்நாடு யுனிவர்சிட்டி குருசோம சுந்தரம் – மலையாள யூனிவர்சிட்டி அனுமோல்! -பாரிஸ் கஃபே படம் விழாவில் நடிகர் விஜய் விஷ்வா பேச்சு

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் பாரிஸ் கஃபே (Paris cafe) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில், படத்தில் நடித்ததுள்ள அனுமோல் பேசும்போது, எல்லோருக்கும் வணக்கம் இந்தப் படம் ரொம்ப முக்கியமான படம்,நான் நடிக்கும் படங்கள் சமுதாயத்திற்கு தேவையான படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பேன். இயக்குனர் கூட பேசும் போது ஒரு கான்ஃபிடன்ட் இருந்துச்சு அதனால தான் இந்த படம் நான் நடித்தேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் எல்லார் கூடையும் நடிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. கே இசையமைப்பாளர் அவருடைய தமிழ் பாட்டை விட மலையாள பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். குரு சோமசுந்தரம் கூட நடித்தது சந்தோஷமா இருந்துச்சு எனக்கு அவரு மேல கோபம் நான் அழகா இல்ல என்ன விட வேற ஒரு ஹீரோயின் அழகா இருக்கங்கன்னு என்கிட்டயே சொல்றாரு இப்ப கூட அவர் கிட்ட சண்டை போட்டேன், ஆனால் அந்த சண்டை அன்பான சண்டைதான், இவர் மேல எனக்கு ரொம்ப ரெஸ்பெக்ட் இருக்கு எல்லோரிடமும்  ஒரே மாதிரி தான்  பழகுவார் . இந்தப் படத்துல நடிச்சது சந்தோஷமா இருக்கு இயக்குனர் தயாரிப்பாளர் எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இது ஒரு சின்ன படம் இல்லை ரொம்ப முக்கியமான படம்..
நடிகர் குரு சோமசுந்தரம் பேசும்போது, அந்தப் படத்துல நடிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம் டைரக்டர் சொன்னதுமே எனக்கு ரொம்ப பிடிச்சு நான் ஒத்துக்கிட்டேன் இந்த படத்தை. நிறைய புது படத்தின் இயக்குனரின் மனைவி வேலைக்கு போவாங்க ஆனா இந்த படத்தோட இயக்குனரின் மனைவி இந்த படத்துக்கு ப்ரடியூசர் ஆயிட்டாங்க அது பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. இந்தப் படம் கன்டென்ட் ஓரியண்டட்  படம். அனுமோல் வேற ஒருத்தவங்கள அழகா இருக்கன்னு சொன்னதும் கடுப்பாயிட்டாங்க அது அன்பான சண்டை. இந்த படத்துடைய எடிட்டருக்கு அவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் கே என்னுடைய நன்றி. முக்கியமா ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் விக்கி இந்த படத்துல ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு எனக்கு போட்டியா இருக்கிற மாதிரி நடிக்கிறார் ரொம்ப கஷ்டமான ரோல் அத ரொம்ப நல்லா பண்ணி இவருக்கு  வாழ்த்துக்கள். கௌசல்யா அவர்கள் வந்ததுக்கு நன்றி பெண்களை மதிக்காத நாடு கண்டிப்பா வளராது , கௌசல்யா மாதிரி இன்னொருத்தங்க இங்கே இருக்கக்கூடாது நம்ம மாறினால்தான் எல்லாமே மாறும் இந்த படம் அதைப்பற்றி தான் பேசும். எல்லோருக்கும் ரொம்ப நன்றி.
நடிகர் விஜய் விஸ்வா அவர்கள் பேசும்போது, இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு என்னுடைய நன்றி அதற்கு காரணமாக சாமி அண்ணனுக்கும் நன்றி. சமீபத்தில் நான் அமெரிக்கா போயிருந்தப்போ தமிழ் சங்கம் மேடையில அமைச்சர் ராஜ்மோகன் இருந்தாரு அந்த விழாவை நான் தான் தொகுத்து வழங்கினேன் அவருடைய அனுமதி ஓட ஒரு பாடலை போட்டோம் அது என்னுடைய பாட்டு அதற்கு கே தான் இசை அமைத்திருந்தார் இசையமைப்பாளர் கே அவர்களுக்கும் என்னுடைய நன்றி. ரெண்டு யுனிவர்சிட்டி கூட எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஒன்னு தமிழ்நாடு யுனிவர்சிட்டி இன்னொன்னு மலையாளம் யூனிவர்சிட்டி குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் கூட நடிச்சது நிறைய கத்துக்கிட்டேன் இவங்க கிட்ட இருந்து அதற்கு என்னுடைய நன்றி. தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுதல் .  நிறைய சின்ன படங்கள் வருது அதற்கு சரியான அங்கீகாரம் இல்லை அரசாங்கம் மூலமா ஒரு ஓடிடி தளம் தொடங்கினால் அது எல்லோருக்கும் ரொம்ப உதவியா இருக்கும் இது என்னுடைய வேண்டுகோள். இந்த படம் சொசைட்டிக்கு தேவையான கருத்தை சொல்லி இருக்கு எல்லாரும் இந்த படத்துக்கு சப்போர்ட் பண்ணுங்க.
படத்தின் இயக்குனர் சராஜ் சீலன் அவர்கள் பேசும்போது, என்னுடைய சினிமா வாழ்க்கை ஆறு வயதில் ஆரம்பித்தது, என்னுடைய அப்பா தான் எனக்கு சினிமா கற்றுக் கொடுத்தார், வாரம் தவறாமல் படங்களை பார்ப்போம், படிச்ச ஸ்கூல் வாசல்ல ஐந்து தியேட்டர் இருக்கும். வகுப்பறையில் ரஜினி கமல் பற்றிதான் அதிகமா பேசுவோம் சினிமாலாம் எங்களுடைய பேச்சு. பாரதிராஜா பாலச்சந்தர் பாலுமகேந்திரா பாக்கியராஜ் இவங்க தான் எனக்கு ரொம்ப புடிச்ச இயக்குனர்கள். நான் பாக்யராஜ் சார்-ஐ இந்த படத்துக்கு  கூப்பிடனும்னு நினைச்சா அவரு இப்ப இல்ல அது ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்க அப்பாக்கு கலைத்துறையில் ரொம்ப ஆர்வம் அவரும் மூலமா தான் நான் எல்லாமே கத்துக்கிட்டேன். நான் சினிமாவை படித்து தான் கத்துக்கிட்டேன். ஒரு நிமிட ஷார்ட் பிலிம் என்னோட பொண்ணை வைத்து எடுத்தேன் அந்தப்படம் செலக்ட் ஆனதும் என்னுடைய பார்வை ரொம்பவும் பெரிதா மாறியது அதற்குப் பிறகு எல்லாமே சினிமா தான் என்று முடிவு செய்தேன். குரு சோமசுந்தரம் கிட்ட முதல் முறை கதை சொன்னதும் அவர் ரொம்ப நல்லா இருக்கு நானே பண்றேன் என்று சொல்லிட்டார் அவர் கூட பயணித்தது எனக்கு சந்தோசமா இருக்கு ரொம்ப நன்றி குரு சார். அனுமோல் கிட்ட போன்ல தான் கதை சொன்னேன் அவருக்கும் பிடித்து ஒத்துக்கிட்டாங்க அதற்கும் நன்றி. படத்துல நடிச்ச நடிகர் நடிகைகள் எல்லாரும் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க எல்லாருக்கும் மனமார்ந்த நன்றி. சாபு இந்த படத்துக்கு ஒரு முக்கியமான பில்லர் நான் சொன்னதை ரொம்ப அருமையா பண்ணி கொடுத்தார். கலை இயக்குனரின் உழைப்பு ரொம்ப முக்கியமானது அவருக்கும் என்னுடைய நன்றி. இசையமைப்பாளர் கே அவர்களுக்கும் என்னுடைய நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்