Home பொது மண்டாடி திரைப்படம் பற்றிய தகவல்கள்

மண்டாடி திரைப்படம் பற்றிய தகவல்கள்

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், எல்ரெட் குமார் தயாரிப்பில், கடல் மற்றும் பாரம்பரிய படகுப் பந்தய விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’ செப்டம்பர் 10, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
‘மண்டாடி’ என்றால் கடல் பயணப் படகுப் பந்தயக் குழுவின் தலைவர் என்று பொருள்.
சூரி மண்டாடியாக முத்துக்காளி என்ற பெயரில் வருகிறார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான சுஹாஸ் இந்த படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
 சத்யராஜ், ரவீந்திர விஜய், பாலசரவணன், அச்யுத் குமார், சச்சனா நாமிதாஸ், மிதூன் ஜெய் சங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பாடல்கள் ‘முட்வே ரெக்கார்ட்ஸ்’ லேபிளில் வெளியாகியுள்ளன.
 
‘மண்டாடி மண்டாடி’ என்ற பாடலை ஜி.வி. பிரகாஷ், வஹீசன் ராசையா, வி.எம். மகாலிங்கம் ஆகியோர் பாடியுள்ளனர். ‘ஒளி வட்டம்’ படத்தின் மற்றொரு முக்கியப் பாடல்.
பிரபல ஒளிப்பதிவாளர் எஸ். ஆர். கதிர் படத்தின் காட்சிகளைப் படமாக்கியுள்ளார்.
படப்பிடிப்பு நடந்த இடங்கள்: படம் 100 கி.மீ தூரமுள்ள தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டது. தொண்டி கடற்கரையிலும் தனுஷ்கோடியில்லும் பெரும்பாலான கடல் சார்ந்த சண்டைக் காட்சிகளும், படகுப் பந்தயக் காட்சிகளும் படமாக்கப்பட்டன.
ஆழ்கடலில் படப்பிடிப்பு நடந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ₹1 கோடி மதிப்பிலான உபகரணங்கள் சேதமடைந்தன. இந்த ஆபத்தான படப்பிடிப்பின் போதுதான் மரணத்திலிருந்து தப்பித்ததாக நடிகர் சூரி குறிப்பிட்டுள்ளார்.
படத்தொகுப்பு  பிரதீப் ஈ. ராகவ்
சண்டைப் பயிற்சி: பீட்டர் ஹெய்ன், திலிப் சுப்பராயன், மகேஷ் மேத்யூ
கலை இயக்கம்: டி.ஆர்.கே. கிரண்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்