Home பொது 5000 பேருக்கு பட்டுப்புடவை! அக்டோபர் 29-ம் தேதி தனது பிறந்தநாள் அக்டோபர் 29-ல் நடிகர் ராகவா...

5000 பேருக்கு பட்டுப்புடவை! அக்டோபர் 29-ம் தேதி தனது பிறந்தநாள் அக்டோபர் 29-ல் நடிகர் ராகவா லாரன்ஸ் முன்னெடுக்கும் புதிய நலத்திட்டம்.

நடிகர் ராகவா லாரன்ஸ் விடுத்துள்ள அறிக்கை:-
லாரன்ஸ் அறக்கட்டளை தனது 20 ஆண்டுகால சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில், ‘பட்டுப்புடவை வழங்கும் திட்டம்’ எனும் புதிய முன்னெடுப்பை அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த 20 ஆண்டுகளில், எங்கள் அறக்கட்டளை மூலம் குழந்தைகளின் கல்வி, இதய அறுவை சிகிச்சைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள், உணவு வழங்குதல் எனப் பல்வேறு நற்பணிகளைச் செய்து வந்துள்ளது. தேவையுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் நான் சென்றிருந்த ஒரு பயணத்தின்போது, ​​ஒரு பெண் என்னிடம் வந்து, தனக்கு ஒரு அழகான பட்டுப்புடவை வேண்டும் என்று கோரி ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அந்தக் கடிதத்தைப் படித்த பிறகு, கிராமப்புறங்களில் வாழும் இன்னும் எத்தனை பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு பட்டுப்புடவையைக் கூட பார்த்திருக்கவோ அல்லது அணிந்திருக்கவோ வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருப்பார்கள் என்று நான் சிந்தித்தேன். எனவே, முதற்கட்டமாக 5000 பட்டுப்புடவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளேன். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், அனைத்துத் தாய்மார்களின் ஆசியைப் பெறவும் வேண்டும் என்ற எளிய எண்ணத்திலிருந்தே இந்த முயற்சி பிறந்துள்ளது.
எனது பிறந்தநாளான அக்டோபர் 29 அன்று, நான் வளர்ந்த இடமான ராயபுரத்தில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறேன்.
இந்த புதிய முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆசிகளும் ஆதரவும் எனக்குத் தேவை.
அன்புடன்
ராகவா லாரான்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்