பிரபல தென்னிந்திய நட்சத்திரம் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்து ஆந்திராவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ஜெய் ஜெய் கணேசா திரைப்படம் விரைவில் தமிழில் வெளியாகவிருக்கிறது.
உதய் பொம்மி செட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் நயன் சாரிகா, பிரகதி ஸ்ரீவத்ஷவா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, ராஜ் அருண் வில்லனாக நடித்திருக்கிறார்.
கதை:-
கணேஷ் தனது நண்பன் சங்கருடன் சேர்ந்து சிறு சிறு திருட்டுகளைச் செய்து வாழ்க்கை நடத்துகிறான்.
ஸ்ருதி என்ற பெண்ணைக் காதலிக்கும் கணேஷ், அவளைத் திருமணம் செய்து நல்ல வாழ்க்கை வாழ விரும்புகிறான். ஆனால் ஸ்ருதி பணத்துக்கு ஆசைப்பட்டு வேறொருவரைத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள்.
இதனால் மனமுடையும் கணேஷ், பெரிய பணக்காரனாக வேண்டும் என்று நினைக்கிறான்.
அந்தச் சூழ்நிலையில், சுமார் ஏழு கோடி மதிப்புள்ள வைரத்தைத் திருடும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கிறது. அதை கச்சிதமாக செய்து முடிக்கிறான் கணேஷ். அந்த வைரத்தை ஒரு விநாயகர் சிலைக்குள் மறைத்து வைக்கிறான்.
இதற்கிடையில், கிஷோர் ஆதவ் என்ற அரசியல்வாதி முதலமைச்சராக வேண்டும் என்று ஆசைப்பட்டு தனது அரசியல் கனவை நிறைவேற்றுவதற்காக 100 கோடியைக் கடத்தத் திட்டமிடுகிறான். ருத்ரா என்ற குற்றவாளியின் உதவியுடன் அந்தப் பணத்தை ஒரு பெரிய விநாயகர் சிலைக்குள் மறைத்து எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறான்.
சிலைகள் கைமாறுவதால் பெரிய குழப்பம் ஏற்படுகிறது. கணேஷ் தனது வைரத்தைத் தேடுகிறான். ருத்ராவும் அவனது கூட்டாளிகளும் தங்களது பணத்தைத் தேடுகிறார்கள்.
இரு தரப்பினரும் ஒரே கிராமத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை மையமாகக் கொண்டு தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்கள். இதில் ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்களே படத்தின் திரைக்கதை.
படத்தில் துள்ளலிசை பாடல்கள், மனதை வருடம் மென்மையான பாடல்களுடன் சிலிர்ப்பூட்டும் சண்டைக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

ஜே.ஜே மூவிஸ் சார்பில் விஜய் மாதவன் தயாரிக்க ஏ.ஆர்.கே ராஜராஜா தமிழ் உருவாக்கத்தை கவனித்து வருகிறார்.
படக்குழு:-
ஒளிப்பதிவு – ஆதித்யா
இசை – சேத்தன் பரத்வாஜ்
பாடல்கள் – சுவிஸ் தமிழ்மகள், பாமகன், ஜோ பைந்தமிழ்
மக்கள் தொடர்பு – வெங்கட்
இது முழுக்க முழுக்க எண்டர்டைன்மென்ட் படம்

