தீபத்தின் ஒளியை ஏழை எளிய குழந்தைகளின் புன்னகையில் பார்க்க, அவர்களை உற்சாகப் படுத்தி மகிழ விரும்பியது ‘ரோட்டரி கிளப் ஆஃப் சென்ட்ரல் எலைட்’ அமைப்பு.
அதையடுத்து ‘ரோட்டரி கிளப் ஆஃப் சென்ட்ரல் எலைட்’ தலைவர் வினய் மேத்தா, செயலாளர் நிகுஞ்ச், பொருளாளர் சித்தார்த் ஜமாத் உள்ளிட்டோர் ‘முஸ்கான்’ என்ற தீபாவளிக் கொண்டாட்டத்தை வி.ஜி.பி. மனமகிழ் பூங்காவில் (VGP Universal Kingdom, Chennai ECR) ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த நிகழ்ச்சியின் மூலம் 2000 ஏழை எளிய குழந்தைகள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் டாக்டர் என். நந்தகுமார் மற்றும் நிகழ்ச்சித் தலைவர் ராகுல் பதிஜா முன்னிலையில் இந்த தனித்துவமான நிகழ்ச்சி நடைபெற்றது.
ரோட்டரி இன்டர்நேஷனல் பற்றி… 1905 ஆம் ஆண்டு ரோட்டரி இன்டர்நேஷனல் பால் பி ஹாரிஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. ரோட்டரி கிளப் என்பது உலகளவில் மனிதாபிமான சேவையை வழங்கும், அனைத்து தொழில்களிலும் உயர் நெறிமுறை தரவுகளை ஊக்குவிக்கும், நல்லெண்ணத்தையும் அமைதியையும் உருவாக்க உதவும் வணிக மற்றும் தொழில்முறை நபர்களின் ஒரு அமைப்பாகும். 1905 இல் பால் பி ஹாரிஸ் உருவாக்கிய இந்த அமைப்பு, 529 மாவட்டங்களில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களுடன் வெற்றி நடைபோட்டு வருகிறது.

