தீபாவளி இனிப்பு, கார வகைகளை வீட்டிலேயே செய்ய திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஜெயா டி.வி.யின் சிறப்பு நிகழ்ச்சி!

தீபாவளிக்கான இனிப்பு, கார வகைகளை நம் வீட்டிலேயே செய்தால் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் நிகழ்ச்சிதான் ‘தித்திக்கும் தீபாவளி.’

இந்நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை (அக்டோபர் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை) மாலை 5 மணிக்கும், மறுஒளிபரப்பு மறுநாள் பகல்1:30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

ஜெயா டிவியில் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து சமையல் கலைஞர்கள் மற்றும் வல்லுனர்கள் மல்லிகா பத்ரிநாத் ,சித்ரா முரளி ,பழனிமுருகன் ,சரவணன் ,சுஜா ,பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து ஒவ்வொரு நாளும் புதுப்புது வகையான இனிப்பு மற்றும் கார வகைகளை செய்முறை விளக்கத்தோடு சமையல் செய்து காண்பிக்கும் இந்நிகழ்ச்சி இல்லத்தரசிகளுக்கு விருந்தாய் அமையும் .

இந்நிகழ்ச்சியை யூடியூப்  பிரபலம் மோகனா தொகுத்து வழங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here