மலையாள நடிகர் செம்பன் வினோத் & சோழர்கால நாய் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் ‘அலங்கு.’ உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகிறது.

பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, குணாநிதி கதை நாயகனாக நடித்துள்ள படம் ‘அலங்கு.’ இந்த படத்தில் சரத் அப்பானி, காளிவெங்கட், சௌந்தரராஜா, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி, மாஸ்டர் அஜய், இதயகுமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தமிழக – கேரள எல்லைப் பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் முற்றிலும் ஆக்சன் சப்ஜெக்டில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த அரசியல்வாதி குழுவுக்கும், தமிழக பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்களே கதைக்களம். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை வடிவமைத்துள்ளனர்.

‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் இயக்குகிறார். இவர் சமீபத்தில் வெற்றிபெற்ற ‘குட்நைட்’ படத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளரும்கூட.

ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் நடித்த ‘செல்ஃபி’ படத்தை தயாரித்த டி. சபரிஷ், எஸ்.ஏ. சங்கமித்ரா இருவரும் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

‘அலங்கு’ என்பது தமிழ்க் குடியின் முதல் நாட்டு நாய் இனத்தை சார்ந்தது. அந்த வகை நாய் ராஜராஜ சோழனின் படையில் போர்நாயாக இருந்ததாகவும் வரலாற்று சான்றுகள் இருக்கின்றன. ஆனால் காலப்போக்கில் அந்த இனம் அழிந்து போனதாகவும், மருவி வேறு இன பெயர்களில் வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இந்த படத்தின் கதையின் அடிப்படைத் தன்மைக்கும், நினைவூட்டலுக்கும் இந்த பெயர் மிகவும் பொருந்தியிருப்பதால் ‘அலங்கு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க வனம், வனம் சார்ந்த மக்கள் என படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு, கேரள மாநிலம் இடுக்கி, அட்டப்பாடி தமிழகத்தின் தேனி, கம்பம், கோவை மாவட்டத்தின் ஆனைகட்டி ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக 52 நாட்கள் நடந்து நடத்தி முடித்துள்ளது.

இந்த படம் முற்றிலும் மாறுபட்ட திரை அனுபவத்தை தரும் எனவும், படத்தில் அதிகளவில் வன விலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து விரைவில் படம் திரைக்கு வரும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

படக் குழு:
எழுத்து & இயக்கம் : எஸ் பி சக்திவேல்
ஒளிப்பதிவு : எஸ்.பாண்டிகுமார்
இசை : அஜீஷ்
கலை இயக்குனர் : பி.ஏ.ஆனந்த்
படத்தொகுப்பு : சான் லோகேஷ்
சண்டை பயிற்சி : தினேஷ் காசி
ஒலி வடிவம் : எஸ்.அழகியகூத்தன், சுரேன்.ஜி
ஒலி கலவை : சுரேன்.ஜி
நடனம் : அசார், தாஸ்தா
கூடுதல் கலை இயக்குநர் : தினேஷ் மோகன்
ஒப்பனை : ஷேக் பாஷா
விலங்கு பயிற்சி : செந்து மோகன்
ஆடை : டி.பாண்டியன்
ஆடை வடிவமைப்பு : ஜோஸ்வா மாக்ஸ்வெல் ஜெ
பாடல் : மோகன்ராஜன், கவின், விஷ்ணு எடவன்
கிராபிக்ஸ் : அஜக்ஸ் மீடியா டெக்
கலரிஸ்ட் : ரங்கா
வண்ணம் : பிக்சல் லைட் ஸ்டூடியோ
தயாரிப்பு நிர்வாகி : எஸ்.முருகன்
தயாரிப்பு மேற்பார்வை : அருண் விச்சு
தயாரிப்பு மேலாளர் : ஆர்.கே.சேது
உதவி தயாரிப்பு மேலாளர் : சேட்டு போல்ட்
விளம்பர வடிவமைப்பு : தண்டோரா
விளம்பர ஸ்டில்ஸ் : ஆர்.மனோ, கமலேஷ் சத்தியன்
இயக்குநர் குழுவினர் : வீரா விஜயரங்கம், அருண் சிவசுப்ரமணியம், விஜய் சீனிவாசன், லியோ லோகன், அபிலாஷ் செல்வமணி, செபின் எஸ், தேவதாஸ் ஜானகிராமன்
நிர்வாக தயாரிப்பு : டி.சங்கர்பாலாஜி
தயாரிப்பாளர் : டி.சபரீஷ், எஸ்.ஏ.சங்கமித்ரா
தயாரிப்பு நிறுவனம் : DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS
மக்கள் தொடர்பு : ஆர்.குமரேசன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here