லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, ‘மெட்ராஸ்’ ஹரிகிருஷ்ணன், தோழர் ராஜீவ் காந்தி நடிப்பில் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்னபூரணி.’ அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் வெற்றிமாறனும் ,நடிகர் ஜெயம் ரவியும் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர். கதாபாத்திரங்களின் இயல்பையும், மாறுபட்ட கதைக்களத்தையும் வெளிப்படுத்தும்படியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
குடும்ப அமைப்பிற்குள் வாழும் ‘பூரணி’, குடும்ப அமைப்பிற்கு வெளியே வாழும் ‘அனா’ஆகிய இருவரின் பயணமே இந்தப்படம். பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை, கருத்து சொல்லும்படியாக இல்லாமல் ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம், ஒரு மாறுபட்ட திரில்லர் கதைக்களத்தில் காட்சிப்படுத்துகிறது இந்த படம்.
யுகபாரதி இப்படத்தின் பாடல்களையும் வசனங்களையும் எழுதியுள்ளார். மராத்தி ஒளிப்பதிவாளர் ஹெக்டர் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தினை அமரன் செய்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக் கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் தெரியவரும்.

