விவசாய புரட்சியையும், கார்ப்பரேட் விவசாய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்ற மையக்கருத்தையும் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ள திரைப்படம் ‘ஏ படம்.’
ராஜகணபதி கதையின் நாயகனாக நடித்து, தாயாரித்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தினார்.
வரும் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மேகா ஸ்ரீ நடித்திருக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சந்திர போஸ், இயக்குநர் காஸ்ட்லெஸ் ஷிவாகோ, மஸ்காரா அஸ்மிதா, சுஷ்மிதா ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு சென்னை, ஏலகிரி மற்றும் ஏற்காடு பகுதியில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
படம் பற்றி தயாரிப்பாளர் ராஜ கணபதி ”நாங்கள் திரைப்படத்தை அழகாக எடுத்தோம் ஆனால் தணிக்கைச் சான்றிதழ் வாங்கும்போது தான் மிகவும் சிரமத்திற்கான சுமார் 45க்கும் மேற்பட்ட காட்சியில் வெட்டுகொடுத்தார்கள். இதனால் நாங்கள் சுமார் 18 மாதங்கள் கோர்ட் வாசலில் அலைந்து மிக சிரமப்பட்டு தணிக்கை சான்றிதழ் பெற்றோம். நான் அம்பேத்கர் வேடத்தில் நடித்துள்ளேன்.
இந்த சமுதாயத்தில் நிலவும் அவலங்களை அம்பேத்கர் பேசுவது போல் பேசி நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டது மேலும் எங்களுக்கு மகிழ்ச்சி. எங்களுடைய நல்ல படத்தை
அனைவரும் திரையில் பார்த்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
படக்குழு:- மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரிப்பில், காஸ்ட்லெஸ் ஷிவாகோ இயக்கத்தில் ஜோஸ் பிராங்கிளின் இசையில் சதீஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.



