Home பொது விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’. முதல் வாரம் 243 திரையரங்குகள்… இரண்டாவது வாரம் 300+ திரையரங்குகள்!

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’. முதல் வாரம் 243 திரையரங்குகள்… இரண்டாவது வாரம் 300+ திரையரங்குகள்!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி வழங்கியுள்ள திரைப்படம் ‘அப்பா குட்டி’. நவம்பர் 20 அன்று வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் குடும்பப் பார்வையாளர்களின் அமோக வரவேற்புடன் இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாகத் தொடர்கிறது.
தமிழ்நாடு முழுவதும் முதல் வாரத்தில் 243 திரையரங்குகளில் வெளியான இப்படம், இரண்டாவது வாரத்தில் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளாக அதிகரித்துள்ளது. பல திரையரங்குகளில் தொடர்ந்து Full House காட்சிகளுடன் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தைப் போலவே குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை, குடும்ப ரசிகர்கள் என அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் ‘அப்பா குட்டி’ அமைந்துள்ளது. குறிப்பாக, அப்பா – மகள் பாசம், குடும்ப உறவுகளின் உணர்வுகள், சுவாரஸ்யமான திரைக்கதை என அனைத்து அம்சங்களும் இணைந்து அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தொடர்ந்து திரையரங்குகளுக்கு வருகை தந்து படத்திற்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள், குடும்பப் பார்வையாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் படக்குழுவினர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
‘அப்பா குட்டி’ – குடும்பத்துடன் திரையரங்கில் கொண்டாடுவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்