இதுவரை ஏற்காத வலுவான கதாபாத்திரத்தில், தோற்றத்தால் வரலாற்றுக் கதையில் கெளதம் கார்த்திக் நடிக்கும் படம் ‘ஆகஸ்ட் 16, 1947.’
கெளதம் கார்த்திக்கோடு, புகழ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை பொன்குமார் இயக்கியிருக்கிறார்.
ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரியுடன் இணைந்து இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்துள்ளார்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக தைரியமாக வெகுண்டெழுந்த இந்தியர்கள் பற்றியதே இந்த படத்தின் கதை. ஒரு சிறிய கிராமம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்த்த வரலாற்று சம்பவங்களின் தொகுப்பாக பீரியட் படமாக உருவாகியுள்ளது இந்த படம்.

இந்த படத்தின் டீசர் ஆன்லைனில் வெளியானதில் இருந்தே படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சுதந்திரப் போராட்டம் குறித்த பின்னணியில் பரபரப்பாக உருவாகியிருக்கக்கூடிய இந்த படத்தின் போஸ்டரை குடியரசு தினத்தில் வெளியிட்டு சிறப்பு சேர்த்துள்ளது படக்குழு.
படத்தின் போஸ்டர் தேசபக்தி மற்றும் படத்தின் கதைக்கருவை தாங்கி நிற்கிற உணர்வைத் தருகிற விதத்திலும், கதாநாயகன் கையில் தீப்பந்தத்துடனும் கண்ணில் எரியும் தாய்நாட்டு தேசபக்தியுடனும் இருக்கும்படியும் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நெருப்பு புரட்சிக்கு வித்திட்டதா அல்லது சோகமான முடிவை கொடுத்ததா? என்ற கேள்விகளுக்கான விடைதான் படத்தின் கதைக்களம்.
படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

