Home பொது அமரம் சினிமா விமர்சனம்

அமரம் சினிமா விமர்சனம்

ஈவு, இரக்கம் பார்க்க நாம என்ன மிருகங்களா? மனுஷங்க.
இப்படியொரு வசனம் படத்தில் இருக்கிறது. அதுவே படத்தின் 90% கதையாகவும் இருக்கிறது.
கதைநாயகன் கூலிப்படை கொலைகாரன். ஒரு கட்டத்தில் திருந்துகிறான்.
ஏன் கொலைகாரனாக மாறினான்? ஏன் திருந்தினான்? திருந்தியவன் நல்லபடியாக வாழ முடிந்ததா இல்லையா?
இந்த கேள்விகளுக்குப் பதில்களாய் விரியும் காட்சிகள் பெரும்பாலும் ரத்தச்சகதி. அந்த ரணகளத்திலும் காதல் பூக்கிறது என்பது ஆறுதல். இயக்கம் திருஅருள் கிருஷ்ணா
நாயகன் தேஜஸ் ராஜன். அடர்ந்த தாடி மீசைக்குள் மறைந்திருக்கும் இறுக்கமான முகத்தைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. ஆயிரம் பேர் தடுத்தாலும் அதையெல்லாம் மீறி சீறிப் பாய்ந்து, ஸ்பைடர் மேன் ரேஞ்சுக்கு பறந்து சென்று கொலை செய்வதைப் பார்க்கும்போது பய உணர்வுக்குள் விழ வேண்டியிருக்கிறது. முதல் பாதி முழுக்க வசனங்கள் இல்லாமல் செயல்பாடுகள் மூலம் மிரட்டுபவர் இரண்டாம் பாதியில் சில வார்த்தைகளை இதமான குரலில் பேசுகிறார்; தனக்குள்ளும் மென்மையான மனதுண்டு என்பதை லேசாக காண்பிக்கும் முகபாவங்கள் பரவாயில்லை ரகம். 
நாயகி ஐரா அகர்வால், நீள் வட்ட முகமும் பளீர் நிறமுமாய் வலம் வருகிறார். தன் தந்தையைக் கொன்றவனை தானே கொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பதாகட்டும், கொலைகாரனை கொல்லும் வாய்ப்பு கிடைக்கும்போது தவித்துப் போவதாகட்டும் நடிப்பில் கேரக்டருக்கு போதுமான உயிரோட்டம் இருக்கிறது.
ஜார்ஜ் மரியான் கூலிப்படையை வழி நடத்துபவராக அசத்தலான கெட்டப்பில் கெத்து காட்டுகிறார். அரசியல்வாதியாக வரும் நாகிநீடு தேவைக்கேற்ப வில்லத்தனத்தில் ஈடுபட ஹரிஷ் பெராடி, சாய் தீனா, கல்கி ராஜா, வாசுதேவன் முரளி உள்ளிட்டோர் கரடு முரடான மனிதர்களாக களமாடுகிறார்கள்.
மிக்கி ஜெ மேயரின் பின்னணி இசை அதிரடியான சம்பவங்கள் நிரம்பிய கதையோட்டத்துக்கு பொருத்தம். பசுமை பரப்பி நிற்கும் காடு, மேடுகளை, மலைப் பகுதிகளை,அருவிப் பெருக்கை பரத் குமாரின் ஒளிப்பதிவில் பார்க்கும்போது படம் பிரமாண்டமாக தெரிகிறது.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அவர்கள் செய்வது நியாயமாகவே இருக்கும்; சிலருடைய நியாயம் பலரும் ஏற்கக்கூடியதாக இருக்கும். இந்த கதையின் நாயகன் கொலைகாரனாக உருவானதன் பின்னணி இன்னும் கொஞ்சம் வலுவானதாக இருந்திருந்தால் அவன் கொல்லப்படும்போது ஆடியன்ஸ்
செம்மரக் கடத்தல் உள்ளிட்ட காட்சிகள் வந்துபோக, திரைக்கதையில் பரபரப்பு கூடப் போகிறது என்று எதிர்பார்த்தால் கதை வழக்கமான பழி வாங்கல், வெட்டுக்குத்து, வன்முறைக்குள்ளிருந்து வெளிவராமலே நிறைவடைவது ஏமாற்றம். இதுபோன்ற கதைகளை ராவாக படமாக்கினால்தான் கவனம் பெறும் என்பதை உணர்ந்து இயக்கியிருப்பதற்காக இயக்குநர் திருஅருள் கிருஷ்ணாவுக்கு பாராட்டுக்கள்.
-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்