ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்து, இயக்கும் புதிய திரைப்படம் ‘அமைச்சர் ரிட்டன்ஸ்.’
கரை வேட்டி கட்டிய கறைபடாத அமைச்சரின் கண்ணியமான காதல் கதை. போலீஸ் பயிற்சி முடித்த ஒரு இளைஞன் அதிர்ஷ்ட வசத்தால் உள்துறை அமைச்சராகிறார். தன் வசமுள்ள போலீஸ் துறையைப் பயன்படுத்தி நாட்டில் நடக்கும் கொள்ளை, கொலை, பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றங்களைத் தடுத்து தமிழ்நாட்டின் முன்மாதிரி அமைச்சராகத் திகழும் இவர் வாழ்க்கையில் மலரும் கண்ணியமான காதலும் அதன் மூலம் சந்திக்கிற சவால்களுமே அமைச்சர் ரிட்டன்ஸ் படத்தின் கதை.

ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அட்சயா கண்டமுத்தன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகுமார், ராமகிருஷ்ணா படத்திற்கு பிறகு மீண்டும் ஜெய் ஆகாஷுடன் இணைந்திருக்கிறார். பிர்லா போஸ், ஸ்ரேவன், ‘கலக்கப் போவது யாரு’ மைக்கேல் அகஸ்டின், திவாகர் ,திடியன், ஈரோடு பிரபு மற்றும் அருணாச்சலம் ஆகியோர் நடிக்கின்றனர். மிஸ் கனடா பட்டம் பெற்ற கீ கீ வாலஸ் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
ஸ்ரீ அம்மன் மீடியாஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் , திருத்தணி , சென்னை அதன் சுற்றுப்புறங்களில் நடந்துள்ளது. தேனிசை தென்றல் தேவா இசையமைப்பில் மொத்தம் 4 பாடல்கள் இடம்பெறுகிறது. மேலும் 5 சண்டைக்காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகளும் இடம் பெறுகிறது. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
அதையொட்டி படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் 7.6. 2022 அன்று நடந்தது. இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா, தயாரிப்பாளர் கே.ராஜன், சண்டைப் பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம், ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான ஜெய் ஆகாஷ் , நடிகை கிகி வாலஸ், தயாரிப்பாளர் சலங்கை துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
திரைக்கதை, இயக்கம் – ஜெய் ஆகாஷ்
இசை – தேனிசை தென்றல் தேவா
ஒளிப்பதிவு – V. E.இளையராஜா
பாடல்கள் – சினேகன், மதன் கார்க்கி.
கதை, வசனம் – T.ஜெயலஷ்மி
எடிட்டர் – ஆண்டனி
நடனம் – ஸ்ரீதர்,தினா
ஸ்டண்ட் – ஜாக்குவார் விஜய்
கலை – பூபதி
மக்கள் தொடர்பு – செல்வரகு
நிர்வாக தயாரிப்பு – சலங்கை துரை

