பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னுதாரணமாக்கிய நடிகர் அருண்விஜய்!

நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2022 காலை ‘உதவும் கரங்கள்’ ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார். ரசிகர்களுடன் இணைந்து தானும் இரத்த தானம் செய்தார்.

இதன்மூலம் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பலருக்கும் முன்னுதாரணமாக மாற்றியுள்ளார்

அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாக கலந்துகொள்ள இராயப்பேட்டையிலுள்ள அரசு மருத்துவமனை இரத்த வங்கியில், இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here