Home சினிமா மலையாளத்தில் சாந்தனு பாக்யராஜ் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ‘பல்டி’ படம் மூலம் களமிறங்குகிறார்!

மலையாளத்தில் சாந்தனு பாக்யராஜ் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ‘பல்டி’ படம் மூலம் களமிறங்குகிறார்!

சாந்தனு பாக்யராஜ் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமாவில் மீண்டும் களமிறங்குகிறார். ‘பல்டி’ எனும் ஆக்ஷன் நிறைந்த அதிரடி திரில்லரில், நடிகர் ஷேனு நிகாமுடன் இணைந்து நடிக்கிறார். புதுமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கும் இப்படம், அதிரடி நிறைந்த விளையாட்டு காட்சிகளோடும், உணர்ச்சிகரமான கதை சொல்லலோடும், குழு ஒற்றுமை, மனவலிமை, மற்றும் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட போராட்டங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தும், ஒரு மிரட்டலான திரில் பயணமாக உருவாகிறது.

படத்தின் தனித்துவமான ஈர்ப்புக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன், சோடா பாபுவாகமுக்கிய வேடத்தில் நடிக்கிறார். முன்னணி இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். துடிப்பு மிக்க இளம் திறமைகளின் பங்கேற்பில், பல்டி 2025 மலையாள சினிமா ரசிகர்களுக்கு ஒரு சினிமா விருந்தாக உருவாகிறது.

2007ஆம் ஆண்டு, நடிகர் மோகன்லாலுடன் நடித்த ஏஞ்சல் ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் சாந்தனு மலையாள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அந்த படம், தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் அவர் தமிழ் திரையுலகில் முழுமையாக கவனம் செலுத்தி, வெற்றிகரமான பயணத்தை தொடர்ந்தார். வெகுகாலமாகவே அவரது மலையாள திரைப்படத்திற்காக ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மலையாள கம்பேக் பற்றி சாந்தனுவிடம் கேட்டபோது, “பல ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமாவுக்கு திரும்புவது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த படம் ஒரு புதிய அனுபவமாகவும், மீண்டும் மலையாளத்தில் களமிறங்க சிறந்த கதாபாத்திரமாகவும் அமைந்துள்ளது” என்றார்.

புதுமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கும், விளையாட்டு பின்னணியிலான அதிரடி திரில்லர் திரைப்படமான இந்த படம், திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் அற்புதமான தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் தயாரிப்புக் குழு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வைரல் வெற்றிகளுக்குப் பெயர் பெற்ற இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இது மலையாள சினிமாவில் அபயங்கரின் அறிமுகப்படம் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் பாடலாசிரியர் விநாயக் சசிகுமாருடனான அவரது கூட்டணி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்