தாயை வெறுக்கும் மகன், மகனுக்காக வாழும் தாய்… உன்னதமான திரைக் காவியமாக ‘செல்லமடா நீ எனக்கு’ மார்ச் 6 முதல் திரையரங்குகளில்! 

தாயை வெறுக்கு மகன், மகனுக்காக வாழும் தாய். இந்த அடிப்படை கதைக்களத்துடன் உறவுகளையும் காதலையும் இணைத்து ஒரு உன்னதமான திரைக் காவியமாக உருவாகியுள்ள படம் ‘செல்லமடா நீ எனக்கு.’

ஆனந்த் சிவம் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் வசீகரன், நேகா கதாநாயகன் நாயகியாக நடிக்க போஸ் வெங்கட், ‘பசங்க’ செந்தி, அமுதவாணன், மீரா கிருஷ்ணன், ரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

காண்போரின் கண்ணீர் குளமாகும் அளவிலான நெஞ்சுருக வைக்கும் காட்சிகளை செதுக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வா.ஆர்.

மனதை வருடும் மென்மையான பாடல்களாலும், துள்ளலிசைப் பாடல்களாலும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர்.

இந்த படம் வரும் மார்ச் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. உத்ரா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.

படக்குழு:-

கதை வசனம் பாடல்கள் – மதுரா வேள்பாரி

தயாரிப்பு – கலைமகள் புரொடக்சன் சிறுமடை லிங்கம்.எஸ்

மக்கள் தொடர்பு – வெங்கட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here