‘கலர்ஸ் தமிழ்’ டிவியின் மகளிர்தின கொண்டாட்டமாக, வரலஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவான ‘கன்னித்தீவு.’ மார்ச் 8 மாலை 3.30 மணிக்கு…

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, வரலஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவான ‘கன்னித்தீவு’ படத்தை வரும் மார்ச் 8, 2023 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு ஒளிபரப்பவுள்ளது.

வரலக்ஷ்மி சரத்குமார் கதைநாயகியாக நடித்துள்ள இந்த படம் அரசியல் உணர்ச்சி கலந்த சமூக உணர்வுகளை நேர்த்தியாக எடுத்துக்காட்டுகிறது.

படத்தில் சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, மொட்டை ராஜேந்திரன், லிவிங்ஸ்டன் மற்றும் ஆஷ்னா சவேரி ஆகியோர் நடித்துள்ளனர்.

சிறு வயது முதல் நண்பர்களான மதி (வரலக்ஷ்மி சரத்குமார்), ஐஸ்வர்யா (ஐஸ்வர்யா தத்தா), சுபிக்ஷா (சுபிக்ஷா) மற்றும் கனி (ஆஷ்னா சவேரி) சமூக விரோத பிரச்சனைக்கு எதிராக போராட முடிவு செய்து சிக்கலில் ஈடுபடுகின்றனர். அதன் மூலம் நாட்டின் சில முக்கிய புள்ளிகளிடம் பிரச்சினையில் மாட்டி விடுகின்றனர். நான்கு தோழிகளின் போராட்டங்களையும், துன்பங்களில் இருந்து அவர்கள் பெறும் வெற்றியையும் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கே. சிட்டி பாபுவின் ஒளிப்பதிவில் வசீகரிக்கும் காட்சியமைப்புகளும், அரோல் கரோலியின் இசையும் படத்திற்கு சுவாரஸ்யமூட்டுகின்றன.

படம் குறித்து வரலட்சுமி சரத்குமார் பேசும்போது, “தமிழ் சினிமாவில் பெண்களின் நடிப்பை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் மிகவும் குறைவு. கன்னித்தீவு போன்ற ஒரு சுவாரசியமான படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் அனைத்து கலர்ஸ் தமிழ் நேயர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here