உலகப் புகழ் பெற்ற ஸ்தபதி தயாரிப்பில், ‘பவுடர்’ பட இயக்குநரின் இணை இயக்குநர் இயக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்.’ பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்!

‘தாதா 87’, ‘பவுடர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீஜியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.ஜே. அலெக்ஸ் பாண்டியன் இயக்கவிருக்கும் முதல் திரைப்படம் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்.’இந்த படத்தை ‘ஸ்ரீ லட்சுமி திரை கலைக்கூடம்’ சார்பில் கும்பகோணத்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற ஸ்தபதி ரோட்டேரியன் டாக்டர் பிரபாகர் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு கும்பகோணத்தையடுத்த தாராசுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மார்ச் 8, 2023 அன்று பூஜையுடன் தொடங்கியது.

‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிய கௌஷிக் ராம் கதாநாயகனாகவும், பிரபல யூடியூபர்களான ரவி விஜே மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கும் இப்படத்தில் சிங்கம்புலி, ‘குக் வித் கோமாளி’ சில்மிஷம் சிவா, அஜித் யுனிக், டிஎஸ்ஆர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெறும் என்றும் சேதுவுக்கு பின் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் எடுக்கப்படும் படமாக இது இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

படம் குறித்து இயக்குந‌ர் பேசும்போது, “இந்த படம் ரொமான்டிக் காமெடி சப்ஜெக்டில் எதிர்பாராத பல திருப்பங்கள் நிறைந்த, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகிறது. கிராமத்திலிருந்து கல்லூரிப் படிப்பிற்காக நகரத்திற்கு வரும் கதாநாயகன் சந்திக்கும் பிரச்சனைகளே படத்தின் முக்கிய கரு. இது அழுத்தமான சமூக கருத்துக்களை நகைச்சுவையுடன் கூறக்கூடிய படமாக இருக்கும்” என்றார். படக்குழு:
ஒளிப்பதிவு – பிரஹத் முனியசாமி
தயாரிப்பு மேற்பார்வையாளர் – நமஸ்காரம் சரவணன்
கலை இயக்குந‌ர் – நந்தகுமார்
நிர்வாகத் தயாரிப்பாளர் – பாண்டியன்
படத்தொகுப்பு – குணா
இசை – ஹரி எஸ் ஆர்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here