மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘கேசினோ’
மாதம்பட்டி சினிமாஸ் & எம்.ஜே. ஃபேக்டரி (MJ Media Factory) தயாரிப்பில், இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.
படத்தின் கதை ஒரு இரவில், ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை மையப்படுத்தி, புதுமையான வகையில், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது.
இப்படம் முழுக்க கோயம்புத்தூரில், இரவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளில் 70 சதவிகிதம் ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. மெஹந்தி சர்க்கஸ் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, வாணி போஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரமேஷ் திலக், ஜான் மகேந்திரன், ‘எரும சாணி’ அமர் கீர்த்தி, நக்கலைட்ஸ் செல்லா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே புதுமையான வகையில் ஒரு காமிக்ஸ் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவின் துப்பாக்கிச் சண்டை, பணத்தைத் தேடி ஓடும் பாத்திரம் ஆகியவை காட்டப்பட்டுள்ளது. இந்த காட்சிகள், படத்தை தியேட்டரில் பார்க்கும் ரசிகர்களை இருக்கை நுனிக்கு கொண்டுவந்துவிடும் பரபரப்பான திரில்லரான இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.
இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
தொழில்நுட்ப குழு:- எழுத்து,படத்தொகுப்பு, இயக்கம்: மார்க் ஜோயல், ஒளிப்பதிவு: விக்னேஷ் J.K, இசை: தினேஷ் நாகராஜன் & ஸ்டான்லி சேவியர், நிர்வாக தயாரிப்பாளர்: முகேஷ் சர்மா கலை மற்றும் தலைமை இணை இயக்குநர்: அமர் கீர்த்தி, விளம்பர வடிவமைப்பு: தீபக் போஜ்ராஜ் ஆடை வடிவமைப்பு: நித்யா கார்த்திகா, மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)