புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு உதவ 6000 பேர் பங்கேற்ற ‘சென்னை ரன்ஸ்’ மாரத்தான்! ‘மெட்ராஸ் ரவுண்டு டேபிள் 1’ அமைப்பு பிரமாண்ட ஏற்பாடு!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் மெட்ராஸ் ரவுண்டு டேபிள் 1 (MRT1) அமைப்பு சென்னை ரன்ஸ் என்ற பெயரில் மாரத்தான் ஓட்டம் ஒன்றினை 11.12. 2022 அன்று நடத்தியது.

அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் ‘மகேஷ் நினைவு டிரஸ்ட்’ அமைப்பின் குழந்தைகளுக்கான புற்றுநோயியல் சிகிச்சை வார்டுக்கு நிதியுதவி திரட்ட வேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடு மெட்ராஸ் ரவுண்டு டேபிள் 1 இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட 6000 பேருக்கு மேல் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஓடினார்கள். பார்வைத்திறன் பாதிப்புள்ளவர்கள் உட்பட, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.சென்னை மக்களுக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் தாராள மனது இருப்பதை இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திரளான மக்கள் கூட்டம் உணர்த்தியது.

இந்த மாரத்தான் நிகழ்வில் 21 கி.மீ., 10 கி.மீ, 5 கி.மீ. மற்றும் 3 கி.மீ. என்ற நான்கு பிரிவுகள் இடம்பெற்றது.  இந்த ஓட்டம் சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் நினைவு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கி அதே வளாகத்தில் நிறைவடையும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நடிகர்கள் ஆர்ஜேபாலாஜி, ‘சூரரைப் போற்று’ கிருஷ்ணகுமார் இருவரும் பங்கேற்று முறையே 5 கி.மீ. மற்றும் 3 கி.மீ. ஓட்டங்களை தொடங்கி வைத்தனர். யு டூ கேன் ரன்‘ என்ற இந்தியாவின் முன்னணி ரேஸ் மேலாண்மை சேவைகள் நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது.பங்கேற்பாளர்களுக்கு ஆதரவளிப்பதற்காக உதவி நிலையங்கள், குடிநீர் வசதி மையங்கள், மருத்துவ வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள், ரேஸ் வழித்தட வழிகாட்டிகள் மற்றும் மாரத்தான் ரேஸ் முடிவடைந்த பிறகு வழங்குவதற்கான சிற்றுண்டிகள் என அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

அடையாறு பாலம், ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில், சாந்தோம் தேவாலயம், கலங்கரை விளக்கம் மற்றும் விவேகானந்தர் இல்லம் போன்ற சென்னையில் பிரபலமான லேண்ட்மார்க் அமைவிடங்களை தனது வழித்தடத்தில் இந்த ரேஸ் கொண்டிருந்ததால் இம்மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்ற நபர்களுக்கு சென்னை மாநகரின் அழகான பகுதிகளை கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  ஒரு கம்ப்யூட்டர் சிப் அடிப்படையிலான ஒட்ட நேரத்தை அளவிடும் அமைப்புமுறை பயன்படுத்தப்பட்டது. இம்மாரத்தான் ஓட்டங்களில் வெற்றிபெற்ற சாதனையாளர்களுக்குப் பதக்கங்களும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.MRT1ன் தலைவர் டாக்டர்அஸ்வின் அகர்வால், “இந்த சாரிட்டி மாரத்தான் பற்றி கூறியதாவது: எமது வருடாந்திரி சாரிட்டி நிதிதிரட்டல் நடவடிக்கையின்  ஒரு பகுதியாக சென்னை ரன்ஸ் நிகழ்வை நடத்தினோம்.  குழந்தைகளுக்காக உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சை வார்டை நடத்தி வரும் மகேஷ் மெமோரியல் டிரஸ்டிற்கு இதன்மூலம் நிதி ஆதரவை வழங்குவதே எமது நோக்கம். இந்நிகழ்வின் வழியாக திரட்டப்படும் நிதியானது, உள்ளூர் சமூகங்களின் ஏழ்மையான சமூக – பொருளாதார பின்னணிகளைச் சேர்ந்த குழந்தைகள் மத்தியில் புற்றுநோய் பாதிப்பை தொடக்க நிலையிலேயே கண்டறிவதற்கும் மற்றும் மகேஷ் மெமோரியல் டிரஸ்டின் குழந்தைகளுக்கான புற்றுநோய் வார்டில் அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்பதால், இந்த மாரத்தான் ஓட்ட நிகழ்வுகள் குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சையில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும்.  MRT1 என்ற எங்களது அமைப்பு மேற்செலவுகள் இல்லாத ஒரு தொண்டு அமைப்பு. இந்நிகழ்வின் மூலம் நாங்கள் திரட்டும் ஒவ்வொரு ரூபாயும் குழந்தைப்பருவ புற்றுநோய் சிகிச்சைக்காக முழுமையாக சென்றடையும் . புற்றுநோய் சிகிச்சையில் நிகழ்ந்திருக்கும் மருத்துவ முன்னேற்றங்கள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை இன்னும் அதிகரிக்கவும் இப்பங்களிப்புகள் உதவும்.  சிகிச்சையின் மூலம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்த இயலும் என்ற நம்பிக்கையை அதிகரிக்கும்; பொதுமக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றி நிலவுகின்ற தவறான கண்ணோட்டங்களும், எண்ணங்களும் அகற்றப்படுவதற்கு இது வழிவகுக்கும்” என்றார்.

சென்னை ரன்ஸ் நிகழ்வின் ஒரு அங்கமாக குழந்தைப்பருவ புற்றுநோய் மீது டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்களில் ஒரு கண்காட்சி நிகழ்வு நடத்தப்பட்டது.  இதில், நிபுணர்கள் வழங்கிய விளக்கவுரைகள் இதுகுறித்த விழிப்புணர்வை உருவாக்கியது.  மாரத்தான் நிகழ்விற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்த கண்காட்சியில் மாரத்தான் ஓட்டத்திற்கான டி-ஷர்ட்கள் மற்றும் BIB எண்களை உள்ளடக்கிய ரேஸ் கிட்கள் பங்கேற்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

மகேஷ் மெமோரியல் டிரஸ்ட் பற்றி…

மக்களின் பெருமதிப்பை பெற்ற இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் மற்றும் MRT1-ன் கடந்தகால உறுப்பினரான காலம் சென்ற மகேஷ் மகாதேவன் நினைவைப் போற்றும் வகையில் மகேஷ் மெமோரியல் டிரஸ்ட் நிறுவப்பட்டது. 13 ஆண்டுகளாக புற்றுநோயை எதிர்த்துப் போராடிய மகேஷ் 2002 அக்டோபரில் காலமானார்.  புற்றுநோய் பாதிப்புள்ள குழந்தைகள் சிகிச்சைப் பெறவும் மற்றும் பாதிப்பிலிருந்து மீண்டு வரவும் உற்சாகமான சூழலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூல் மகேஷ் நினைவு குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மைய கட்டிடத்தை அனைத்து வசதிகளுடன் நேர்த்தியாக உருவாக்குவது இந்த டிரஸ்டின் முயற்சிகளாக இருந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here