ஷாருக்கான், ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான ‘டங்கி’ திரைப்படம், உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்து, இந்த ஆண்டின் சிறந்த வசூல் செய்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
இந்த படத்தை பார்வையிட்ட பார்வையாளர்களின் வலிமையான வாய்மொழி அதாவது மவுத் டாக்கால் படத்தின் வசூல் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதயத்தை வருடும் கதையுடன் அனைத்து தரப்பு பார்வையாளர்களின் இதயங்களை வென்றதுடன்.. அனைத்து வயதினரையும் கவரும் படமாகவும் இப்படம் அமைந்துள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் என் ஆர் ஐ (NRI) பார்வையாளர்களுடன் மிகவும் தொடர்புடையதாக இருப்பதால் அவர்களிடமிருந்தும் அதிக அன்பைப் பெற்றுள்ளது. பார்வையாளர்களின் மனதில் தன் முத்திரையை பதித்தப் பிறகு ‘டங்கி’ திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்து, பாக்ஸ் ஆபீசில் தனது இருப்பிடத்தை உறுதி செய்தது. படம் வெளியான நான்கு நாட்களில் இந்தியாவில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. தற்போது அதன் பெருமைக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் இந்த திரைப்படம் 250 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.