நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி, நிமிஷா சஜயன் நடிப்பில், ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார் தயாரிப்பில், க்ரைம் ஆக்ஷன் கதையாக உருவாகியிருக்கும் ‘டிஎன்ஏ’ படத்திற்கு ஜிப்ரான் பின்னணி இசையமைக்கிறார்.
இந்த படம் பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்தே ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் வகையில் படத்தில் இடம்பெறும் 5 பாடல்களுக்கு 5 திறமையான இசையமைப்பாளர்கள் இசையமைக்கிறார்கள்.
பலவிதமான எமோஷன்ஸ், எனர்ஜி மற்றும் ரசிக்கக் கூடிய பல தருணங்களை படம் கொண்டுள்ளது. இதை காட்சி அனுபவமாக ரசிகர்களுக்கு மேம்படுத்தி கொடுக்க இசையமைப்பாளர் ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையும் படத்தில் அமைந்துள்ளது என்பதை படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
படம் ரிலீஸுக்கு தயாராகி வருவதால் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளிவரும்.