‘டிமாண்டி காலனி 2’ முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவு!

அஜய் ஞானமுத்து தயாரித்து இயக்கும் ‘டிமாண்டி காலனி 2’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஒசூரில் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதாகவும், இதுவரை படத்தின் 40% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.அஜய் ஞானமுத்து ‘டிமாண்டி காலனி’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆஃபிஸ் வசூலிலும் சாதனை படைத்தது.  ஹாரர் ஜானரில் இந்தத் திரைப்படம் புதிய பென்ச் மார்க்கை உருவாக்கி தமிழ் சினிமாவில் அதுவரை இருந்த வழக்கமான மற்றும் பழமையான விஷயங்களை உடைத்தது. திறமையான நடிப்பைக் கொடுத்திருந்த நடிகர் அருள்நிதிக்கு இன்னொரு மகுடமாக இந்தப் படம் அமைந்தது.

படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆன போதிலும் இப்போது பார்த்தாலும் புது அனுபவத்தையே பார்வையாளர்களுக்கு கொடுத்து வருகிறது. அருள்நிதி & அஜய்ஞானமுத்துவின் வெற்றிக் கூட்டணி தற்போது ‘டிமாண்டி காலனி2’ படத்திற்காக மீண்டும் இணைந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.‘Vengeance of the Unholy’ என்ற டேக்லைன் கொண்ட இந்த படத்தில் அருள்நிதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு சிறப்பாக நிறைவடைந்ததையடுத்து, படக்குழுவின் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் அஜய் ஞானமுத்து நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் படம் நன்றாக வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம் & தயாரிப்பு: அஜய் ஞானமுத்து,
இசை: சாம் சிஎஸ்,
ஒளிப்பதிவு: தீபக் டி மேனன்,
படத்தொகுப்பு: குமரேஷ் டி,
கலை இயக்கம்: ரவி பாண்டி,
சண்டை: கணேஷ்,
ஆடை வடிவமைப்பு: நவதேவி ராஜ்குமார் & மாலினி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here