தெருக்கூத்துக் கலையை மையமாக வைத்து முத்து வீரா இயக்கியிருக்கும் படம் ‘டப்பாங்குத்து.’
பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதுபோல் இந்த படத்திற்கும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ஃபர்ஸ்ட் லுக் அக்டோபர் 2; 2023 அன்று மாலை, 72 லட்சம் பேரை சப்ஸ்கிரைபராக கொண்ட தமிழ் சினிமா யூ டியூப் சேனலில் (Tamil Cinema YouTube Channel) வெளியாகவிருப்பது குறிப்பிடத் தக்கது.
எஸ்.ஜெகநாதன் தயாரித்துள்ள இந்த படத்தில், தலைப்புக்கு ஏற்றார்போல் ஆடி, பாடி, மகிழ 15 வகையான நாட்டுப்புறப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
‘மருதம் நாட்டுப்புற பாடல்கள்’ நிறுவனம் வழங்கும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.
உருவாக்கத்தில் உறுதுணை:-
கதை, திரைக்கதை, வசனம்: எஸ்டி குணசேகரன்
ஒளிப்பதிவு: ராஜா கே பக்தவத்சலம்
இசை: சரவணன்
நடனம்: தீனா
கலை: எம்.சிவாயாதவ்
படத்தொகுப்பு: டி.எஸ்.லக்ஷ்மணன்
மக்கள் தொடர்பு: எஸ்.செல்வரகு
சண்டைப் பயிற்சி: ஆக்சன் பிரகாஷ், நாதன் லீ
ஸ்டில்ஸ்: வின்சென்ட்
தயாரிப்பு நிர்வாகம்: சின்னமணி