Home பொது டி சி சினிமா விமர்சனம்

டி சி சினிமா விமர்சனம்

படு பயங்கர கேங்ஸ்டர் காதலில் விழுகிற கதை. தொடர்ந்து வன்முறைப் படங்களை இயக்குகிற அருண் மாதேஸ்வரன் தொடர்ந்து வன்முறைப் படங்களை இயக்குகிற லோகேஷ் கனகராஜை ஹீரோவாக்கியிருக்கிற ‘டி சி.’
ஹீரோ தாஸ் (லோகேஷ் கனகராஜ்) வெட்டுக்குத்து, கொலைன்னு குற்றச் செயல்கள்ல குஷியா ஈடுபடுறவரு. அவருக்கு பாலியல் தொழில்ல ஈடுபடுற சந்திராங்கிற பெண் மீது ஐயோ பாவம்னு ஒரு ஃபீல் உருவாகுது. அந்த ஃபீலிங்ல சிலபல கொலைகளை கொடூரமா பண்றாரு. கொஞ்ச நாள்ல அந்த பெண் மீது அவருக்கு காதல் உருவாகுது. அதுக்கு மேலயாச்சும் ரத்தவெறிச் சம்பவங்கள்ல ஈடுபடாம சராசரி மனுஷனா மாறுவார்னு பார்த்தா, அவர் யாரை லவ் பண்றாரோ அந்த அம்மணி இவரையே தூக்கிச் சாப்பிடுற மாதிரி சிலரை குறிவெச்சு போட்டுத் தள்றாங்க.
ஆடியன்ஸுக்கு ‘இதுக்கு இல்லையா சார் ஒரு என்ட்டு’ங்கிற மாதிரி ஒரு கேள்வி உருவாகுது.
தாஸ் ஏன் கேங்ஸ்டரா மாறுனாரு? சந்திரா ஏன் பாலியல் தொழிலாளியானாங்க? அப்டிங்கிறதுக்கு வழக்கம்போல பிளாஷ்பேக் இருக்குது. அவங்க பண்ற தப்புக்கெல்லாம் தண்டனை கிண்டனை கிடைக்குதா? அவங்களோட காதல் கல்யாணத்துல முடியுதா இல்லையா?ங்கிறது ஸ்க்ரீன்பிளே.
கசகசன்னு தாடி மீசை, ரஃப்பான லுக்கு, சரக்கடிச்சுட்டு போதையில திரியுறது, தாறுமாறா கொலை செய்றது, எமோஷ்னல் ஃபீலிங்கை காட்டுறதுன்னு தாஸா வர்ற லோகேஷ் கனகராஜோட நடிப்புல குறையா எதுவும் சொல்லிட முடியாது.
வாமிகா கபி, சந்திரா கேரக்டர்ல செம மாஸ் காட்டுறாங்க. அவங்க குடுக்குற எமோஷனல் டச் படத்துக்கு கதைக்கு பெரிய பிளஸ். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பாலியல் தொழிலாளியா வந்து, பரிதாபப்பட வைக்கிறாங்க.
தலைவாசல் விஜய், டைரக்டர் கஸ்தூரி ராஜா, போலீஸ் அதிகாரியாக வர்றவர் அப்படி இப்படின்னு ஏகப்பட்ட பேர் கச்சிதமா நடிச்சிருக்காங்க.
ராக்ஸ்டார் அனிருத்தோட பிஜிஎம் கர்நாடிக் மியூஸிக் டச்ல சீன்களுக்கு எனர்ஜி கொடுத்திருக்கு. . முகேஷ் ஜியோட கேமரா ஒர்க்கும், பிரசன்னா ஜி.கே எடிட்டிங்கும் படத்த செம ஸ்டைலிஷா காட்டியிருக்கு.
படம் மேக்கிங்கா நல்ல ரிச்சாத்தான் இருக்கு. அதையெல்லாம் குறைச்சு மதிப்பிட முடியாது.
அருண் மாதேஸ்வரனும் லோகேஷ் கனகராஜுமா சேர்ந்து அவங்களால என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சு வெச்சிருக்காங்க. சீனுக்கு சீன் ரத்தம் தெறிக்கிற வயலன்ஸ் படமெல்லாம் யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவங்க டிசி’க்கு டிக்கெட் போடலாம். அவ்ளோதான்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்