தேசிய அளவிலும் உலகளவிலும் தனது இருப்பை விரிவுபடுத்தி வருகிறது ஈஇன்போசிப்ஸ் (eInfochips) நிறுவனம். பொறியியல் மற்றும் டிஜிட்டல் உருமாற்ற சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான (leading provider of product engineering and digital transformation services) ஈஇன்போசிப்ஸ் தனது 11-வது அலுவலகத்தை சென்னையில் துவங்கியுள்ளது.
2022-ம் ஆண்டில் வலுவான வாடிக்கையாளர் தேவை மற்றும் வணிக வளர்ச்சியைப் பூர்த்தி செய்வதற்காக ஈஇன்போசிப்ஸ் அதன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக எகிப்து, இந்தியா என உலகளவில் மையங்களைத் திறந்தது.
இந்த நிறுவனம் உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள், வன்பொருள் வடிவமைப்பு, சிலிக்கான் வடிவமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, கிளவுட் மற்றும் பிளாக்செயின் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்ப துறைகளில் தற்போது 35 பொறியாளர்களுடன் செயல்பட்டு வரும் ஈஇன்போசிப்ஸ் நிறுவனம், அடுத்த ஆறு ஆண்டுகளில் மேலும் சென்னையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொறியாளர்களை (Engineers) பணியமர்த்தவுள்ளது.சென்னை அலுவலகம் திறப்பு விழா குறித்து ஈஇன்போசிப்ஸ் தலைமை இயக்க அதிகாரி சுமித் சேத்தி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ‘எங்களது பணியாளர்கள் தனிப்பட்ட வளர்ச்சியை அனுபவிக்கும் அதே வேளையில் அவர்கள் தொழில் ரீதியாக சிறந்து விளங்குவதற்கு உதவும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை நாங்கள் உருவாக்குகிறோம். நாங்கள் வழங்கும் பணி சுதந்திரம் மற்றும் நெகிழ்வுத்தன்மை இதற்கு பேருதவியாக உள்ளது. எங்கள் சென்னை அலுவலகம் திறக்கப்பட்டதன் மூலம், தமிழகத்தின் திறன் வாய்ந்த இளைஞர்களை நாங்கள் பணியமர்த்த முடியும்” என்றார்.
ஈஇன்போசிப்ஸ் நிறுவனம், பார்ட்சூன் 500 பட்டியலில் 34 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்துடன் 104வது இடத்தில் உள்ள ஏரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். 3000 பொறியாளர்களுடன், சிறந்த கிளவுட் திறன்கள், வாடிக்கையாளர் ஒருங்கிணைப்பு, ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு மற்றும் நிலையான செயல்பாட்டின் மூலம் ஈஇன்போசிப்ஸ் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குகிறது.
இந்தியா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் கூட்டமைப்பு (IESA), இந்த ஆண்டின் வடிவமைப்பு சேவைகள் நிறுவனத்திற்கான விருதை ஈஇன்போசிப்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியது. மேலும் இந்நிறுவனம் நாஸ்காம் 2021ம் ஆண்டுக்கான பொறியியல் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் நிகழ்வில், அடுத்த தலைமுறை தயாரிப்பு மற்றும் இந்திய தயாரிப்புக்கான இரண்டு முக்கிய விருதுகளை பெற்றுள்ளது.
ஈஇன்போசிப்ஸ் பற்றி:-
ஏரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஈஇன்போசிப்ஸ் நிறுவனம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் தயாரிப்பு பொறியியல் சேவைகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. இணையம், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், பாதுகாப்பு, சென்சார்கள், வயர்லெஸ், கிளவுட் மற்றும் பவர் ஆகியவற்றில் நிபுணத்துவத்தை வழங்குவதன் மூலம் ஈஇன்போசிப்ஸ் தனது வாடிக்கையாளர்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கான நேரத்தை துரிதப்படுத்துகிறது. கார்ட்னர், ஜின்னோவ், ஐஎஸ்ஜி, ஐடிசி, நாஸ்காம் மற்றும் பலர் உட்பட பல சிறந்த ஆய்வாளர்கள் மற்றும் தொழில் அமைப்புகளால் பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சேவைகளில் முன்னணி நிறுவனமாக ஈஇன்போசிப்ஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.