இட்டர்னல்ஸ் சினிமா விமர்சனம்

இட்டர்னல்ஸ் சினிமா விமர்சனம்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 10 சூப்பர் ஹீரோக்கள் என்று குறிப்பிடப்படும் இட்டர்னல்ஸ், டிவியன்ட்ஸ் என்ற தீய குணம் கொண்ட மிருகங்களை அழிக்கவும் மனித இனத்தை காப்பாற்றவும் அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனி சக்தி இருக்கிறது. அவர்களுக்கு வயதும் கூடாது. அவர்களைக் கொல்வதும் சாத்தியமில்லை.

அந்த 10 பேரும் உலகத்தில் உள்ள அத்தனை டிவியண்ட்ஸ்களையும் பெரிதாய் போராடி அழிக்கிறார்கள்.

கதையோட்டம் இன்றைய காலகட்டம் நோக்கி நகர்கிறது. அந்த சூப்பர் ஹீரோக்களை முன்னைவிட அதிக சக்தி கொண்ட டிவியண்ட்ஸ் ஒன்று, ஒவ்வொருத்தராக அழிக்க முற்படுகிறது. மேலும் சூப்பர் ஹீரோக்களின் சக்தியையும் அந்த மிருகம் எடுத்துக் கொள்கிறது.

இப்போது நமக்கு, முன்பு முழுவதுமாக அழிக்கப்பட்ட டிவியண்ட்ஸ் எப்படி மீண்டும் வந்தது?’ என்ற கேள்வி எழும். அதற்கு பதில் தருவதோடு, சூப்பர் ஹீரோக்கள் தங்களை காப்பாற்றிக் கொண்டார்களா? டிவியண்ட்ஸ்களை அழித்தார்களா? என்பதே திரைக்கதை. இயக்கம்: சோலி ஜோவா

2019-ல் வெளியான அவெஞ்சர்ஸ்: என்ட்கேம் படத்திற்குப்பின் அதிகம் எதிர்பார்ப்புக்குள்ளான படம் இது.

சாகச காட்சிகள், சண்டைக்காட்சிகள் சுருக்கமாகவே இடம்பெற்றுள்ளது. கதையும், சாகச காட்சிகளின் பிரமாண்டமும் ஈர்க்கிறது.

பென் டேவிஸின் ஒளிப்பதிவு விஷூவல் டிரிட்டாக கண்களை நிறைக்கிறது.

ராமின் டிஜவாடியின் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை பல மடங்காக்குகிறது.

கிட் ஹரிங்டன், ஏஞ்சலினா ஜூலி, ஜெம்மா சான், ரிச்சர்ட் மடடேன், கிட் ஹரிங்டன், குமைல் நஞ்சினி, லியா மேக்ஹுக், டான் லீ, ஹரிஷ் படேல், பாரி கியோகன், லாரன் ரிட்லோவா என நடிகர், நடிகைகளின் நடிப்புப் பங்களிப்பு சிறப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here