Home பொது கேப்டன் விஜய்காந்தின் மகனுடன் இணைந்த உலகப் புகழ்பெற்ற ஹிப் ஹாப் இசைக்கலைஞர் 50 சென்ட்! நவம்பரில்...

கேப்டன் விஜய்காந்தின் மகனுடன் இணைந்த உலகப் புகழ்பெற்ற ஹிப் ஹாப் இசைக்கலைஞர் 50 சென்ட்! நவம்பரில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி.

நடிகர் விஜய்காந்தின் மகன் விஜய பிரபாகரன் இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல்லைகளை மாற்றியமைக்க ‘ட்ராக்டிகல் கான்சர்ட்ஸ்’ (Tracktical Concerts) நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.

இந்த கூட்டணியின் மூலம் மும்பையில் நடைபெறவிருக்கும் முதல் கான்சர்ட்’டில் பிரபல ஹிப் ஹாப் கலைஞரான கர்டிஸ் 50 சென்ட் கலந்து கொள்கிறார். இவரது நிகழ்ச்சிகளுக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான ‘கிராமி’ மற்றும் ‘எம்மி’ விருதுகளை வென்ற புகழ்பெற்ற கலைஞர் கர்டிஸ் 50 சென்ட் ஜாக்சனின் உலகளாவிய இசைக்கச்சேரி The Final Lap Tour 2023 இந்தியாவில் நவம்பர் 25-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இந்த வரலாற்று நிகழ்வு 50 சென்ட்’டின் Get Rich or Die Tryin ஆல்பத்தின் 20-வது ஆண்டு விழாவைக் குறிக்கிறது. நிகழ்ச்சி மும்பையிலுள்ள டி.ஒய். பாட்டீல் அரங்கில் நடைபெறவுள்ளது.

நேரடி பொழுதுபோக்கு, திரைப்படத் தயாரிப்பு மற்றும் கலைஞர்கள் ஒருங்கிணைப்புத் துறையில் புகழ் பெற்று விளங்கும் விஜய பிரபாகரனின் ‘வி.ஜெ.பி.’ (VJP) மற்றும் ட்ராக்டிகல் கான்சர்ட்ஸ் என்ற இரு முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி பிரபல பாடல்கள் மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் பாடல்களை தருவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களும் கலந்து கொண்டு பாடவிருக்கிறார்கள்.

தன்னிகரற்ற பாடல் வரிகளை எழுதுவதில் புகழ்பெற்ற 50 சென்ட், முதன் முதலில் வெளியிட்ட Get Rich or Die Tryin பட்டித்தொட்டியெங்கும் சென்றடைந்து, இசை உலகில் நீங்கா இடம் பிடித்தது. இவரது புகழை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்தது. அந்த ஆல்பத்தில் உள்ள பாடல்கள் இன்றும் கலாச்சார புரிதல், ஆழமான கதையம்சம் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்தியாவில் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து பேசிய 50 சென்ட், ‘நான் இந்தியாவுக்கு வந்து 6 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2017-ம் ஆண்டு இந்தியா வந்திருந்தேன். எப்போதும் போல் கடந்த முறையும் எனது இந்தியப் பயணம் அன்பால் நிறைந்திருந்தது. Final Lap Tour நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நவம்பரில் இந்தியாவுக்கு வரவிருக்கிறேன்” என்றார்.

மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி பற்றி விஜய பிரபாகரன் பேசியபோது, ‘‘கலையுலகில் எனது தந்தை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஒரு தனி அடையாளம் உள்ளது. அதை முன்னெடுத்துச் செல்லும் வழியில் எனது இந்த முயற்சி புதிதாகவும் மற்றும் கலைத் துறையில் ஒரு மாறுபட்ட தொடக்கமாகவும் இருக்கும்” என்றார்.

ட்ராக்டிகல் கான்சர்ட்’டின் சிஇஓ வம்சிதரன் கௌதம ராஜன் இதற்கு முன்பாக சர்வதேச ஹிப் ஹாப் ஆர்டிஸ்ட் ப்ளாரிடாவை முதன் முறையாக சென்னைக்கு அழைத்து இசை நிகழ்ச்சி நடத்தியவர். மட்டுமில்லாமல் சர்வதேச புகழ்பெற்ற கிராமி மற்றும் எம்மி விருதாளரான ஏகானை தமிழில்  லவ் ஆந்தம் பாடலுக்காக இணைந்து பணியாற்ற வைத்த பெருமையும், சர்வதேச கலைஞர்கள் பலருடன் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைத்த பெருமையும் வம்சிதரன் கௌதமராஜனுக்கு உண்டு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்