விஜய் டிவி புகழ் நடித்துள்ள ‘4 இடியட்ஸ்’ திரைப்படம் பிளாக் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது.
ரவி மரியா வில்லனாகவும், மும்பை குயின் பிரக்யா நயன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். வின்செண்ட் அசோகன், கும்கி அஷ்வின் திடியன், இந்திரன் பாவா லஷ்மணன் மகாநதி சங்கர் சி எம் பாலா, விஜய் யோன் போன்றோர் குணசித்திர நடிப்பை வழங்கியுள்ளனர்.
இயக்குநர் ஹரி, நடிகர் பிரகாஷ் ராஜ், பொம்மரிலு பாஸ்கர் ஆகியோர் இயக்கிய படங்களில் இணை இயக்குநராக பணி புரிந்த சஜோ சுந்தர் முருகேசன் இயக்கியுள்ளார்.
இரண்டு துள்ளலான பாடல்கள் மற்றும் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையோடு குடும்பமாக பார்த்து ரசிக்கும் வகையிலான இந்த படம் யூ ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.
படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது.
படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

