2 செப்டம்பர் 22: மெட்ராஸ் மெடிக்கல் மிஷனின் 40வது ஆண்டு மாணிக்க விழாவின் போது, தய அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்கான நவீன வசதிகளைக் கொண்ட ஐந்து அறுவைச் சிகிச்சை கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் நம் நாட்டில் உள்ள மிக நவீனமான தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன.
நோயாளிகளுக்கு மிகச் சிறந்த மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கும் மருத்துவமனை எம்.எம்.எம். ஆகும். இந்தப் புதிய அறுவைச் சிகிச்சைக் கூடங்களைக் கட்டுவதற்கும், விரைவில் அமையவிருக்கும் அவசரச் சிகிச்சைப் பிரிவை ருவாக்குவதற்கும், எம்.எம்.எம். மருத்துவமனை 15 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அவசரச் சிகிச்சைப் பிரிவில், அதிவேக நோய் கணித்தல் மற்றும் உயிர் காத்தல் பகுதி, ஆலோசனை அறை ஆகியவை இருக்கும்.
1982இல் ஒரு கிறித்துவ தொண்டு நிறுவனமாகத் தொடங்கப்பட்ட எம்.எம்.எம். மருத்துவமனை, ‘சமூக நிறுவனம்’ என்ற கருத்தின் அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறது. இத்தகைய றுவன கள், ஒரு தொழில் நிறுவனத்துக்கே உண்டான திறமை மற்றும் முனைப்புடன் கூடல்படு அதேசமயம், இந்த நடவடிக்கைகளில் இருந்து திரட்டப்படும் நிதி, அதன் களுக பிரித்து வழங்கப்படாமல், மீண்டும் சமூகத்தின் நலனுக்கே முதலீடு செய்யப்படும்.
இந்த மருத்துவமனை குழுமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய முயற்சிகளைப் பற்றி, இதன் முதன்மை ஆலோசகரும், நிர்வாகக் குழு உறுப்பினருமான திரு. பாபு டேனியல் கூறியதாவது, “இந்தச் சமூகத்தின் நலனுக்காக 40 ஆண்டுகளாக பங்களிப்பு செய்து, மாணிக்க விழா கொண்டாடி வரும் இந்தத் தருணத்தில், நாங்கள் மேலும் 80 முதல் 100 கோடி ரூபாய் முதலீட்டில், நொளாம்பூர் வளாகத்தில், செவிலியர் மற்றும் இதர துணை மருத்துவக் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த மையத்தையும், 100 படுக்கை வசதி கொண்ட பொது மருத்துவமனையையும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்க உள்ளோம்.”

மேலும் திரு. பாபு டேனியல் அவர்கள் பேசும் போது “தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த அறுவை சிகிச்சைக் கூடங்கள், என்.ஏ.பி.எச்., உலக சுகாதார மையம் மற்றும் அமெரிக்க சொஸைட்டி நிர்ணயித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படியே உருவாக்கப்பட்டுள்ளன.”
இதயவியல் துறை இயக்குநரான டாக்டர் அஜித் முல்லசாரி “கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் செய்துவரும் இதய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 30 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கூடுதல் அறுவை சிகிச்சைக் கூடங்களை உருவாக்குவது அத்தியாவசியம். ஏற்கெனவே இருக்கும் நான்கு அறுவை சிகிச்சை கூடங்களோடு, மேலும் ஐந்து சேரும்போது, மொத்தம் ஒன்பது கூடங்கள் கிடைக்கின்றன. இதன் மூலம், அறுவை சிகிச்சை செய்வதற்காக காத்திருப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.” என்று கூறினார்.
இதய அறுவை சிகிச்சை இயக்குநரான டாக்டர் எஸ். ராஜன், புதிய அறுவை சிகிச்சைக் கூடங்களைப் பற்றி விளக்கினார்:
“இந்தப் புதிய அறுவை சிகிச்சைக் கூடங்களில், காற்றின் தரம் மிகவும் நன்றாக இருக்கும். அதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள ஏ.எச்.யு (ஏர் ஹாண்டிலிங் யூனிட்) மற்றும் எச்.இ.பி.ஏ. (ஹை பிஷியன்சி பார்ட்டிகுலேட் ஏர்) ஆகிய இரண்டு காற்று வடிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏ.ச. இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்த எச்.இ.பி.ஏ. காற்று வடிப்பான், அறுவை சிகிச்சைக் கூடத்தின் காற்றில் உள்ள 99.97 சதவிகித நோய்க்கிருமிகளை நீக்கிவிடும். அறுவை சிகிச்சைக் கூடம் பயன்பாட்டில் இல்லாத போது, ஏ.எச்.யு. வடிப்பான்கள், தொடர்ந்து இயங்கி, காற்றைச் சுத்தப்படுத்திக் கொண்டே இருக்கும். இதன்மூலம், அறுவை சிகிச்சை மையத்தில் அதிகபட்ச பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக் கூடங்களின் சுவர்களில் நோய்க்கிருமி எதிர்ப்பு பொருட்களைக் கொண்டு தடுப்பரண் உருவாக்கப்பட்டுள்ளது. காற்றுபுகா வண்ணம் அமைந்துள்ள கதவுகளில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கத்தீட்டர் ஆய்வகத்தில் இருந்து அறுவை சிகிச்சை கூட படங்களைக் காண்பிக்கும் எக்ஸ்ரே பார்க்கும் பெட்டிகள் மற்றும் தொலைக்காட்சித் திரைகள் இணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும், வெளியே அரங்கத்தோடு இணைக்கப்பட்டது. அங்கே மாணவர்கள், அறுவை சிகிச்சையைப் பார்த்துக் கற்றுக்கொள்வதற்கான ஏற்பாடு இது. ஒவ்வொரு அறுவை சிகிச்சைக் கூடத்துக்கு வெளியேயும் சுத்தமான நடைபாதையோடு ‘பாஸ்பாக்ஸ்’ இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அறுவை சிகிச்சையின் போது, வெளிக்கதவு தொடர்ந்து திறந்து மூடப்படுவது குறைக்கப்படும்.
பின்னர் புற ஊதா ஒளி கொண்ட தனி அடுக்கில், உயர் திறன் கொண்ட டி.இ.இ. (Transesophageal Echocardiography (TEE) கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சுத்தப்படுத்தப்பட்ட ஙகேயுள்ள காற்று, வடிப்பான்கள் மூலம் நீக்கப்பட்டுவிடும். இதனால், பல்வேறு Tளிகளுக்கு இடையே நோய்த் தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது. இந்த அறுவை கூடங்களுக்குள்ளேயே சுத்தமான மற்றும் நோய்க்கிருமிகள் நீக்கப்பட்ட பகுதிகள் தனித்தனியே உள்ளன.
எம்.எம்.எம். மருத்துவமனை, ஏற்கெனவே உள்ள நான்கு அறுவை சிகிச்சை கூடங்களோடு, மேலும் புதிய ஐந்து கூடங்களை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது.
அதிகரித்து வரும் இதய அறுவை சிகிச்சை எண்ணிக்கையினாலேயே, புதிய அறுவைச் சிகிச்சைக் கூடங்கள் தேவைப்படுகின்றன.
தேசிய மற்றும் சர்வதேச தரத்துக்கு இணங்கவே புதிய அறுவை சிகிச்சை கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அடுத்த இரண்டு மாதங்களில், எம்.எம்.எம். மருத்துவமனை அவசரச் சிகிச்சைப் பிரிவைத் தொடங்க உள்ளது.