தளபதி விஜய்யின் கோட்’ டிரெய்லர் ஆகஸ்ட் 17-ல் ரிலீஸ்! புதிய போஸ்டரில் வெளியானது உற்சாக அறிவிப்பு!

தளபதி விஜய் நடிக்க, வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘கோட்’ திரைப்படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகவிருக்கிறது. சுதந்திர தினமான இன்று அதற்கான அறிவிப்பு புதிய போஸ்டரில் வெளியானது.

இரட்டை வேடங்களில் தளபதி விஜய் தோன்றும் ‘கோட்’ விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த திரைப்படமாக ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி மற்றும் யோகி பாபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும்.

தளபதி விஜய்யின் 68வது படமான ‘கோட்’, அவரது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும். தான் ஏற்றிருக்கும் இரண்டு கதாபாத்திரங்களுக்காக கடினமான உழைப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தேசத்தின் பெருமையான சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்டுள்ள ‘கோட்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் எதிர்பார்ப்புகளை இன்னும் எகிற வைத்துள்ளது.

படம் ரசிகர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து படைக்கும் வகையில் செப்டம்பர் 5-ம் தேதி உலகெங்குமுள்ள திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here