கே.பி.ஒய் பாலா, பாலாஜி சக்திவேல் நடித்துள்ள ‘காந்தி கண்ணாடி’ கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியானது. சுவாரஸ்யமான உள்ளடக்கம், இயல்பான நடிப்பு, ஆழமான உணர்வுகளுக்காக பாராட்டுகளையும் பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது.
பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா ஆகியோரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. விவேக் – மெர்வின் கூட்டணியின் இசை, பாலாஜி கே.ராஜாவின் ஒளிப்பதிவு, சிவானந்தீஸ்வரனின் எடிட்டிங் ஆகியவை படத்திற்கு வலு சேர்த்துள்ளன.
வசீகரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள மூத்த நடிகை அர்ச்சனாவின் பங்களிப்பு படத்துக்கு பெரும் உணர்ச்சி ஆழத்தை சேர்த்துள்ளது.
அதையடுத்து படத்தின் விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி பி.சக்திவேலன் தனது அலுவலகத்தில் ‘காந்தி கண்ணாடி’ படக்குழுவினரை அழைத்து சிறப்பு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தார்.
நிகழ்வில் இயக்குநர் ஷெரீஃப், தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
நடிகை அர்ச்சனா ”பார்வையாளர்களுடன் ஆழமாக இணைக்கும் படத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி” என்றார்.
சக்திவேலன் “சக்தி ஃபிலிம் பேக்டரியில் நாங்கள் எப்போதும் கருத்துகள் நிறைந்த சினிமாவையே ஆதரிக்கிறோம். அது மக்களை மகிழ்விப்பதோடு, மனதில் நீண்டகாலம் நிற்கும். காந்தி கண்ணாடி அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு” என்றார்.
தயாரிப்பாளர் ஜெய் கிரண் “காந்தி கண்ணாடி தயாரித்த அனுபவம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இப்போது மக்களிடம் இருந்து இவ்வளவு அன்பும் பாராட்டும் கிடைப்பது, உண்மையான கதை எப்போதும் மனங்களைத் தொட்டே தீரும் என்பதை நிரூபிக்கிறது” என்றார்.

