நடிகைகள் இனியா, வடிவுக்கரசி உட்பட பல்துறை சாதனைப் பெண்கள் 15 பேருக்கு ப்ரியா ஜெமீமாவின் ‘ஜியோ இந்தியா பவுண்டேஷன்’ விருது! மகளிர் தினத்தில் உற்சாக விழா!

சமூக சேவகி ப்ரியா ஜெமீமா நடத்திவரும் ‘ஜியோ இந்தியா பவுண்டேஷன்’ சார்பில் சென்னை சவேரா ஹோட்டலில் மார்ச் 8; 2023 அன்று சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ். தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
நடிகைகள் இனியா, வடிவுக்கரசி, பல்வேறு துறைகளில் சாதித்த சாரதா ரமணி, நீனா ரெட்டி, சிந்து வினோத்குமார், பினா போயஸ், தாரணி கோமல், தேவி கிருஷ்ணா, முனைவர் மாயலக்ஷ்மி, முனைவர் கிரேசி, மரு. சவுமியா ரமணி, மரு.டாஸ்மியா பாப்பா, ப்ரார்ஹிபா யுவராஜ் உள்ளிட்ட 15 பேருக்கு சிறந்த பெண் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
இருளர் இன பெண்மணியான சொர்ணலதாவும், பழங்குடி இனத்தை சேர்ந்த ஆசிரியர் சித்ராவும் சிறந்த பெண் ஆளுமைகளுக்கான விருதை பெற்றுக் கொண்டனர்.
விழாவில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான 15 தையல் இயந்திரங்கள் பழங்குடி பெண்கள் வளர்ச்சிக்காக க்ளோபலிங் டபிள்யூ.டபிள்யூ நிறுவனம் வழங்க ஜியோ இந்தியா பவுண்டேஷன் நிறுவனர் பிரியா ஜெமீமா பெற்றுக் கொண்டார்.
விருது பெற்றவர்கள் அனைவருமே சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள் என்றும் கிராமப்புற பெண்களின் சக்தியை பயன்படுத்தும் வகையில் ஊக்கமளிக்க இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ஜியோ இந்தியா பவுண்டேஷன் நிறுவனர் ப்ரியா ஜெமீமா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here