Home சினிமா  மீண்டும் தனித் திறமையை வெளிப்படுத்திய விஜய் ஆண்டனி; ரசிகர்களைக் கவர்ந்து படத்துக்கு எதிர்பார்ப்பை அதிகரித்த ககன மார்கன்...

 மீண்டும் தனித் திறமையை வெளிப்படுத்திய விஜய் ஆண்டனி; ரசிகர்களைக் கவர்ந்து படத்துக்கு எதிர்பார்ப்பை அதிகரித்த ககன மார்கன் படத்தின் முதல் சிங்கிள் ‘சொல்லிடுமா.’

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ககன மார்கன் படத்திலிருந்து ‘சொல்லிடுமா’ என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி இசையமைத்துப் பாடியிருக்கும் இந்த பாடல், அனைத்து வயதினரையும் சுண்டி இழுக்கும் எனர்ஜிடிக்கான பாடலாக அமைந்துள்ளது.

இந்த பாடல் வசீகரிக்கும் பாடல் வரிகளைக் கொண்டு இசையமைக்கப் பட்டிருக்கிறது. இசையமைப்பாளராகவும், பாடகராகவும் விஜய் ஆண்டனி மீண்டும் தனது தனித் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுப்பதோடு, படத்தின் வெளியீடு எப்பொழுது என்ற எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.

இந்த படத்தை பிரபல எடிட்டர் லியோ ஜான் பால் கொலை மர்மம் சார்ந்த திரில்லர் வகையான படமாக இயக்கியுள்ளார்.

விஜய் ஆண்டனியுடன், அறிமுக நாயகன் அஜய் திஷான் வில்லனாக நடிக்கிறார். இருவரின் நடிப்பும் ரசிகர்களை நாற்காலி முனையில் அமர வைக்கும் என்பது உறுதி.

ஒளிப்பதிவாளர் எஸ் யுவாவின் மிக நுட்பமான ஒளிப்பதிவும், கலை இயக்குநர் ஏ ராஜாவின் எதார்த்தமான கலைப்படைப்பும், அதோடு கூடுதலாக விஜய் ஆண்டனியின் இசை மற்றும் அழுத்தமான கதை ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து பார்வையாளர்களுக்கு ஒரு ‘எட்ஜ் ஆஃப் த திரில்லர்’ விருந்தாக அமையும் என்பது கூடுதல் உத்தரவாதம்.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனியின் 12வது தயாரிப்பு இது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்