Home பொது ஜி டி என் சினிமா விமர்சனம்

ஜி டி என் சினிமா விமர்சனம்

‘இந்தியாவின் எடிசன்’னு போற்றப்படுற நம்ம ஊர் விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவோட வாழ்க்கை சுவாரஸ்யமா, சுறுசுறுப்பா திரையில வந்திருக்குதுங்க.
படிப்பு கம்மியா இருந்தாலும், தன் சொந்த அறிவால எலக்ட்ரிக் மோட்டார், ரேடியாக்கள்ன்னு ஏகப்பட்ட பொருட்களை சொந்த மூளையால உருவாக்கி பிரிட்டிஷ்காரனுக்கே சவால் விட்டவர் ஜி.டி. நாயுடு.
அவரோட முழு கதையையும் இழுக்காம, அவரோட கண்டுபிடிப்புகளுக்கு வந்த முட்டுக்கட்டைகள், அரசியல் சூழ்ச்சிகள், பிரிட்டிஷ் அரசு அவர் மேல போட்ட தேசத் துரோக வழக்குகள்னு குறிப்பிட்ட சில முக்கியமான பகுதிகளை மட்டும் எடுத்து செம விறுவிறுப்பா ஸ்க்ரீன்பிளே பண்ணிருக்கார் டைரக்டர் கிருஷ்ணகுமார் ராமகுமார்.
ஜி.டி. நாயுடுவா மாதவன். அந்த கெட்டப் அம்புட்டு பொருத்தம். கோயம்புத்தூர் பாஷையும், விஞ்ஞானிக்கே உண்டான அந்த கம்பீரமும், மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் அடிபணியாத துணிச்சலும்னு மனுஷன் அப்படியே ஜி டி நாயுடுவாவே வாழ்ந்திருக்காருங்க. ‘ராக்கெட்ரி’ படத்துக்கு அப்புறம் மேடிக்கு இன்னொரு மைல்கல்னு தாராளமா சொல்லலாம்க.
சத்யராஜுக்கு எதிரிகளை தெனாவட்டா டீல் பண்ற ஜோலி. அதை ஜாலியா செஞ்சிருக்காரு. துஷாரா ஜி டி நாயுடுவோட மனைவியா இளமையான தோற்றத்திலும் முதுமைப் பருவ கெட்டப்லயும் வர்றாங்க. அம்மணியோட நடிப்பு ரொம்ப துடிப்பா இருக்குதுங்கோ.
ஜெயராம், கருணாகரன், தம்பி ராமையா, ஜான் விஜய், விஜய் யேசுதாஸ், டி ஜே அருணாச்சலம், ஷீலா, ஜெர்மனியப் பெண்ணாக சில்பா ஸ்ரீகுமார், பிரிட்டிஷ் தொழிலதிபராக ரிச்சர்ட் பக்தி க்ளெய்ன்னு படத்துல ஏகப்பட்ட நடிகர் நடிகைகள். எல்லோருக்கும் கெட்டப் நல்லா செட்டாவுது; நல்லாவும் நடிச்சிருக்காங்க. 
கோவிந்த் வசந்தாவோட பின்னணி இசை சீன்களுக்கு செமையா வேகம் ஏத்துது. அரவிந்த் கமலாநாதனின் கேமரா பழைய காலத்து கோயம்புத்தூரை அப்படியே கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துதுங்க. ஆர்ட் டைரக்சன் டீமும் கடுமையா உழைச்சிருக்கு.
ஜி டி நாயுடுன்னா யாரு, அவரு என்னவெல்லாம் செஞ்சிருக்காரு, அடக்கு முறைக்கு ஆளாகி எப்படி மீண்டு வந்தாருன்னு தெரியவைக்கிற இந்த படம் மாணவ சமூகத்துக்கு நல்ல வரலாற்றுப் பாடமுங்க. தாராளமா தியேட்டருக்கு குடும்பத்தோட போகலாம்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்