சந்தானம் கதை நாயகனாக நடித்திருக்கும் ‘குலு குலு’ படத்தின் முதல் தோற்றம் (First look) வெளியிடப்பட்டிருக்கிறது. கூடவே படம் ஜுன் மாதம் வெளியாகும் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது!
சந்தானத்தின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருப்பதால் இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
‘மேயாதமான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குலு குலு’. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘ லொள்ளு சபா’ மாறன், ‘லொள்ளு சபா’ சேசு, டி எஸ் ஆர், பிபின், கவி, ஹரிஷ், யுவராஜ், மாரிதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் கவனித்திருக்கிறார்.இந்த திரைப்படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ராஜ் நாராயணன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
‘குலு குலு’ படத்தின் படபிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.