Home பொது கனடா வாழ் தமிழர் ஆர்.ஜே. சாய் தயாரிப்பில் வித்தியாசமான தலைப்பில் உருவாகும் ‘ஹேப்பி டைவர்ஸ் டே.’ 

கனடா வாழ் தமிழர் ஆர்.ஜே. சாய் தயாரிப்பில் வித்தியாசமான தலைப்பில் உருவாகும் ‘ஹேப்பி டைவர்ஸ் டே.’ 

கனடா வாழ் தமிழரான ஆர்.ஜே. சாய் (RJ Sai), தனது புதிய தமிழ்த் திரைப்படத்தைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகவிருக்கும் இத்திரைப்படத்திற்கு ‘ஹேப்பி டைவர்ஸ் டே’ (Happy Divorce Day) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பு முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாகக் கொண்டாடப்படும் காதலர் தினம், நண்பர்கள் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம் போன்றவற்றின் வரிசையில், ‘டைவர்ஸ் டே’ எனப்படும் விவாகரத்து தினம் என்ற புதுமையான சிந்தனையை மையமாகக் கொண்டு இப்படத்தின் தலைப்பு அமைந்துள்ளது.
சமகால உறவுகளின் மாற்றங்கள், திருமண வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்கள் மற்றும் இன்றைய சமூகச் சூழலில் உறவுகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த புதிய பார்வையை இத்திரைப்படம் ரசிகர்களுக்கு வழங்கும் எனத் தயாரிப்பாளர் ஆர்.ஜே. சாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இத்திரைப்படத்தை இயக்கவிருக்கும் இயக்குநர், நடிக்கவிருக்கும் முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிட உள்ளனர்.
வித்தியாசமான தலைப்புடன் கவனம் ஈர்க்கத் தயாராகும் ‘ஹேப்பி டைவர்ஸ் டே’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்